பரிசுத்த ஆவி என்பது என்ன? Jeffersonville, Indiana, USA 59-12-16 1. நாம் வழக்கமாக இங்கு நடத்தும் கூட்டத்தைக் காட்டிலும் இதும் சிறிது வித்தியாசமான கூட்டமா யிருக்கும். பெரும்பாலும் ஒவ்வொரு முறையும் நாம் இங்கு ஒன்று கூடும்போது, அது ... வியாதியஸ்தர்களுக்கு சுகமளிக்கவும், சரீர தேவைகளுக்காகவும் நடத்தப்படும் ஒரு கூட்டமாயிருக்கும். அது .... அதற்கு முக்கியத்துவம் செலுத்தப்பட்டது. ஆனால் இன்றிரவு ஆத்துமா - மனிதனின் ஆவி - சுகம் பெறுவதற்காக இந்த எழுப்புதலை நாம் துவங்கியிருக்கிறோம். இருந்தபோதிலும், கர்த்தருக்கு சித்தமானால், ஞாயிறு காலையன்று (ஞாயிறு பள்ளியின்போது, ஞாயிறு காலை) நாம் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கப்போகின்றோம். கர்த்தருக்கு சித்தமானால் ஞாயிறு காலை வழக்கமான ஜெபவரிசையை அமைப்போம். ஆனால் இந்த வாரம் இரவு நேரங்களில் ஆத்துமாவுக்காக நித்திய காரியங்களைக் குறித்து பேச நாங்கள் மிகவும் ஏவப்படுகிறோம். 2.இப்பொழுது, சரீரம் சுகம் பெற்றால், அது நம்மெல் லோரையும் மனமகிழச் செய்கிறது. ஏனெனில் நமது தேவன் வியாதியஸ்தர்களை சுகப்படுத்துகிறார் என்பதை அது உறுதியாக காண்பிக்கிறது என்று நாமறிவோம். ஆனால் வியாதியாயிருந்து சுகம் பெற்றவர்கள், நீண்ட காலம் வாழ நேரிட்டால், ஒருக்கால் மறுபடியும் வியாதிப்பட வகையுண்டு - எந்த வியாதியினின்று சுகம் பெற்றனரோ, அதே வியாதி அவர்களை பிடிக்கவும் வகையுண்டு. அதனால் சுகமளித்தல் இல்லையென்று சொல்லிவிட .. முடியாது. மருத்துவர் நிமோனியா ஜுரத்துக்காக மருந்து கொடுக்கிறார். அவர்கள் சுகம் பெற்று விட்டனர் என்று அவர் கூறி முடித்து ஒருக்கால் இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் மரித்துப்போகின்றனர். அது மறுபடியும் வந்துவிடுகின்றது. ஆனால் ஆத்துமா சுகம் பெறும்போது, நீங்கள் உங்களுக்குள் நித்திய ஜீவனைப் பெறுகின்றீர்கள். கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு நாம் மிக அருகாமையில் இருக்கிறோம் என்று நம்புகிறேன். எனவே நம்மால் இயன்றதை செய்து ஒவ்வொரு ஆத்துமாவையும் தேவனுடைய ராஜ்யத்தினிடமும், ராஜ்யத்தை ஜனங்களிடமும், ஆவி சுகம் பெறுவதற்காக கொண்டு வரவேண்டியது நமக்கு அவசியமாயுள்ளது. இயேசுவின் சரீரம் எனக்குத் தெரிந்த மட்டில் மிகவும் வியாதிப்பட்ட சரீரம் என்று எண்ணுகிறேன். அதாவது, பூமியிலுள்ள ஆவிக்குரிய சரீரம் மிகவும் வியாதியாயுள்ளது. 3.உங்களை ஒவ்வொரு இரவும் அதிக நேரம் வைத்துக்கொள்ள நாங்கள் எண்ணம் கொண்டிருக்க வில்லை. ஏனெனில் இந்த முதலாம் இரவின்போதே, எங்கள் அன்பார்ந்த நண்பர்களை உட்காரவைக்க எங்களுக்கு போதிய இடமில்லை. நாங்கள் ஒரு புதுசபைக் கட்டிடத்தை, ஒரு பெரிய கூடாரத்தை, இந்த இடத்திலோ அல்லது கர்த்தர் எங்களை வேறெங்கு நடத்துகிறாரோ அந்த இடத்தில் கட்டுவதென்று திட்டமிட்டுள்ளோம். எங்களுக்கு தெரிந்த வரையில், அது இங்கு தான் இருக்கும். புதன் முதல் ஞாயிறு முடிய நடக்கவிருக்கும் கூட்டங்களைக் குறித்து அறிவிப்பை நாங்கள் அளித்துவிட்டோம். பிறகு ஞாயிறு துவங்கி கிறிஸ்துமஸ் விடுமுறை. தேவன் எங்களை எப்பொழுது நிறுத்தக் கூறுகிறாரோ, அதுவே எங்கள் நேரமாயிருக்கும். பலன்கள் (results) என்னவாயிருக்குமென்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் இந்த கூடாரத்திலுள்ள ஜனங்களும், கூட்டு சபைகளிலுள்ளவர்களும் - அவைகளில் ஒன்று ஊடிகாவிலுள்ள பரிசுத்த கூடாரம். அதற்கு சகோ.கிரிம் ஸ்னெல்லிங் போதகாராயிருக்கிறார். மற்றொன்று நியூ ஆல்பனியில் உள்ளது. அதற்கு சகோ. ஜூனி' ஜாக்ஸன் போதகர். மேலும் நெடுஞ்சாலையில் ஒன்றுள்ளது. அங்கு சகோ. ரட்டல் போதகர், நாங்கள் (இந்த கூடாரத்தின் கூட்டு சபைகள் உட்பட), எங்கள் ஜனங்கள் கிறிஸ்துவுடன் , மேலான ஐக்கியம்கொள்ளும்படிக்கு முயன்று வருகிறோம். அதுவே எங்கள் நோக்கம். எனவே அடுத்த சில இரவுகளின்போது, நான் வேதத்திலிருந்து படித்து அதன் பேரில் உங்களுக்கு கற்பிக்க வேண்டுமென்று தீர்மானித்திருக்கிறேன்..... 4.இன்றிரவு பரிசுத்த ஆவி என்பது என்ன? என்னும் பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். நாளை இரவு, பரிசுத்த ஆவி எதற்காக அளிக்கப்பட்டது? என்பதன் பேரில் பிரசங்கம் செய்யலாம் என்றிருக்கிறேன். வெள்ளி இரவு (ஒலி நாடாக்கள் பதிவு செய்பவர்களே, வெள்ளி இரவன்று அளிக்கப்படும் செய்தியை பதிவு செய்ய வேண்டாம்), நான் எப்படி பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வது, நான் பெற்றுக்கொண்டேன் என்பதை எப்படி அறிவேன்? என்பதைக் குறித்து. அதன் பிறகு, கர்த்தர் சனியும், ஞாயிறு எப்படி நடத்துகிறாரென்று பார்ப்போம். ஞாயிறு காலை சுகமளிக்கும் ஆராதனை ஞாயிறு இரவு மற்றுமொரு சுவிசேஷக ஆராதனை. நீங்கள் ஒவ்வொருவரும் அறிய வேண்டுமென்று விரும்புகிறேன்... ஒலிப்பதிவுக் கருவிகள் பின் அறையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்றறிவேன். இதை நாங்கள் கூற விரும்புகிறோம். இப்படிப்பட்ட சுவிசேஷக் கூட்டங்களின் போது, தங்கள் சொந்த கருத்துக்கள் போதிக்கப்பட்டவர் பல்வேறு ஸ்தாபன சபைகளிலிருந்து இங்கு வந்திருக்கின்றனர் - ஒவ்வொருவரும். அதனால் பரவாயில்லை. சகோதரர் மத்தியில் பிரிவினையை விதைக்கும் குற்றத்துக்கு ஆளாக நான் ஒருபோதும் விரும்பினதில்லை. வெளியில் நடக்கும் கூட்டங்களில், என் கூட்டங்களை ஒழுங்கு செய்த சகோதரர் விசுவாசிக்கும் சுவிசேஷக சத்தியங்களை நான் வேதத்திலிருந்து போதிக்கிறேன். ஆனால் இந்த கூடாரத்திலோ, நாங்கள் விசுவாசிப்பதை நான் பிரசங்கிக்க விரும்புகிறேன். எனவே உங்களுக்குப் புரியவில்லையென்றால், நாங்கள் ஏன் அப்படி விசுவாசிக்கிறோம் என்று என்னை கேட்கும் கேள்வி கொண்ட ஒரு சிறு கடிதத்தையோ அல்லது குறிப்பையோ உங்களிடமிருந்து பெற்றுக்கொள்வது எனக்கு மகிழ்ச்சியைத் தரும். என்னால் இயன்றவரையில் அதற்கு நான் விளக்கம் தர முயல்வேன். 5.உங்களுக்குத் தெரியும், ஒவ்வொரு சபையும்; உங்களுக்கு ஒரு உபதேசம் (doctrine) இல்லாவிடில், நீங்கள் ஒரு சபையல்ல. நீங்கள் நிலைகொள்ளும் ஏதாவொன்று உங்களுக்கு இருந்தாக வேண்டும் - நீங்கள் ஆதரிக்கும் சில கொள்கைகள். ஒரு நபரின் இணைப்பு, அல்லது அவர் சேர்ந்துள்ள ஸ்தாபனம் எதுவாயிருப்பினும், அந்த நபர் தேவனுடைய ஆவியினால் பிறந்திருந்தால், அவர் என் சகோதரர், அல்லது என் சகோதரியாகி விடுகிறார். அது எந்த ஸ்தாபனமாயிருப்பினும்... நாம் மற்ற காரியங்களில் கிழக்கிலிருந்து மேற்கு உள்ள தூரத்துக்கு கருத்து வேற்றுமை கொண்டிருக்கலாம், இருப்பினும் நாம் சகோதரர்கள். அந்த சகோதரன் கிறிஸ்துவுடன் அருகாமையில், மேலான விதத்தில் நடக்க வேண்டு மென்று முயற்சி செய்வதைத் தவிர வேறொன்றையும் நான் செய்யமாட்டேன். வேறெந்த உண்மையான கிறிஸ்தவனும் அதை தான் எனக்கும் செய்வான் என்று நான் நம்புகிறேன். 6.இந்த கூடாரத்தை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு நீண்ட கூட்டத்தில் பங்கு கொள்வதற்காக நாம் இதற்குள் பிரவேசிப்பதில்லை. நான் இதற்குள் பிரவேசிக்கும் காரணம் என்னவெனில், நீங்கள் உங்களுக்குப் பின்னாலுள்ள ஒவ்வொரு பாவத்தையும் சுட்டெரித்து விட்டு, ஒவ்வொரு பாவத்தையும் சரிபடுத்திவிட்டு, நமது இருதயங்களிலும் வாழ்க்கையிலும் உள்ள அனைத்தோடும் இதற்குள் பிரவேசிக்க வேண்டுமென்று உங்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். கர்த்தருடைய வருகைக்கென்று நமது ஆத்துமாக்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டு மெனும் ஓரே நோக்கத்துடன் நாம் வரவேண்டு மேயன்றி, வேறெந்த நோக்கத்துக்காகவும் அல்ல. நான் ஏற்கனவே கூறின விதமாக, சில சமயங்களில், மற்றவர்கள் கொண்டிருக்கும் கருத்துக்கு சிறிது மாறாக நான் எதையாகிலும் போதிக்கவோ அல்லது கூறவோ செய்யலாம். நான் சச்சரவுக்காக இங்கு வரவில்லை (பாருங்கள்?)... கர்த்தருடைய வருகைக் கென்று நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளவே நாம் இங்குள்ளோம். 7.இந்த சிறு குழு... பல்வேறு இடங்களிலிருந்து இங்கு விஜயம் செய்துள்ள சகோதரர்கள் என்னுடன் இருக்கின்றனர் என்று நானறிவேன். அவர்கள் வந்திருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. அடுத்துள்ள பட்டினங்களிலிருந்தும் வந்துள்ள ஜனங்கள் இங்குள்ளனர் என்பதில் ஐயமில்லை. நீங்கள் வந்திருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. எங்களிடம் அன்பு பாராட்டி, இவைகளைக் கேட்பதற்கென நீங்கள் வந்திருப்பதை நாங்கள் பாராட்டுகிறோம். தேவன் ... என் சகோதரனே, சகோதரியே, உங்கள் இருதயத்தில் தேவன் ஊற்றக் கூடிய மிகுந்த ஐசுவரியத்தை நீங்கள் வீட்டுக்கு கொண்டு செல்வீர்களாக என்பதே என் ஜெபம். 8.இந்த சிறு கூடாரத்துக்கு இதை கூற விரும்புகிறேன்.... இக்கூடாரத்துக்கு வருபவர்கள் பூமியிலுள்ள மிக அருமையான ஜனங்களில் ஒருவர் என்று நான் நம்புகிறேன். மிக அருமையான எல்லா ஜனங்களுமே இங்கு வருகின்றனர் என்று நான் கூறவில்லை. பூமியின்லுள்ள மிக அருமையான ஜனங்களில் சிலர் இந்த கூடாரத்துக்கு வருகின்றனர் என்று மாத்திரமே கூறினேன். ஒவ்வொரு நாளும் நான் கூட்டத்தில் கலந்துகொள்ளும்போது, இந்த கூடாரத்துக்கு ஒரு பெரிய தேவையுள்ளதைக் காண்கிறேன் அதற்கு ஒரு பெரிய தேவையுண்டு, அதாவது அது நிறைக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆழ்ந்த வாழ்க்கை கொண்டதாய், தேவனுடன் இன்னும் அருகாமையில் நடக்க வேண்டும். இந்த செய்திகளை அவர்களுக்கு அளிப்பேன் என்று அவர்களுக்கு வாக்களித்துள்ளேன். இவைகளை வெளிப்படையாக உரைத்து போதிக்கும் இந்நேரத்தில், உங்களை உள்ளே கொண்டு வந்து, எங்களுடன் தேவனுடைய வார்த்தையில் ஐக்கியம் கொள்ளச் செய்வதென்பது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. முதல் மூன்று இரவுகளில், பிரசங்கிப்பதற்கென நாம் ஒரு பொருளைத் தெரிந்துகொள்ளப் போவதில்லை. ஆனால் தேவனுடைய வார்த்தையிலிருந்து ஒரு செய்தியை உங்களுக்கு கற்பிக்கப் போகின்றோம். நான் செய்யாத ஒன்றை மற்றவர் செய்ய வேண்டுமென்று நான் கூற மாட்டேன். இந்த வாரம் எனக்கு முழுவதுமாக கல்வாரியாக இருந்தது. கூறப்போனால், அந்தகாரத்தின் முழுமையின் அருகாமையை நான் அடைந்து, எனக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலாயிற்று. ஆனால் நான் ஒவ்வொரு சித்தத்தையும், எல்லாவற்றையும், எனக்குத் தெரிந்தமட்டில், கர்த்தரிடம் முழுவதுமாக சமர்ப்பித்துவிட்டேன். 9.அன்றொரு இரவு, நள்ளிரவுக்கு சற்று பின்பு, மனைவியும் நானும் கண்விழித்து, ஜெபித்து, எங்கள் முன்னறையிலுள்ள சிறுமுக்காலிக்கு முன்பாக, கர்த்தருடன் பேசி, இரு வேதாகமங்களும் திறந்திருக் கையில், முழு ஊழியத்திற்கென எங்களை முழுவதுமாக தேவனிடம் மறுபடியுமாக பிரதிஷ்டை செய்து, எங்கள் சொந்த சித்தங்களையும், எல்லாவற்றையும், எதிர்மாறான எண்ணங்களை அவரிடம் சமர்ப்பித்து, கர்த்தராகிய இயேசுவை சேவிப்போம் என்று உறுதி கூறினோம். அதுவே உங்கள் மனப்பான்மையாயிருக்குமென்றும், நீங்களும் அப்படியே செய்திருப்பீர்கள் என்றும் நான் நம்புகிறேன். நாம் வந்திருக்கும் இந்த இரவு நேரத்தில், நாம் பரிசுத்த பூமியின் மேல்; ஜெபித்து, உபவாசித்து, ஈடுசெய்து, தேவனிடத்திலிருந்து ஒன்றைப் பெற்றுக்கொள்ள ஆயத்தப்படும் ஜனங்களின் மத்தியில் வந்திருக்கிறோம். பசியுள்ளோராய் வந்துள்ள எவரும் பசியுடன் திரும்பமாட்டார்கள் என்றும், தேவன் அவர்களை ஜீவ அப்பத்தினால் போஷிப்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இப்பொழுது, நாம் அவருடைய பரிசுத்த வேதகாமத்திலிருந்து வாசிப்பதற்கு முன்பு, ஜெபத்துக்காக சிறிது நேரம் தலை வணங்குவோம். 10.கர்த்தாவே, ஏற்கனவே இன்றிரவு இவ்விடத்திலிருந்து ஜெபம் ஏறெடுக்கப்பட்டுவிட்டது... சீயோனின் பாடல்கள் உமது பிள்ளைகளால் பாடப்பட்டன. அவர்களுடைய இருதயங்கள் உம்மிடம் உயர்த்தப்பட்டன. எங்களை உமக்கென்று பிரதிஷ்டை செய்யவும், எங்கள் ஆத்துமாவின் ஆழத்திலிருந்து உம்மை ஆராதிக்கவும் நாங்கள் இங்கு வந்துள்ளோம். கர்த்தாவே, நீர் மலையின் மேல் உட்கார்ந்து உமது சீஷர்களுக்கு போதித்தபோது, ''நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் திருப்பதியடைவார்கள்'' என்று கூறினதை உமக்கு நினைவுபடுத்துகிறோம். கர்த்தாவே, நீர் அதை வாக்களித்திருக்கிறீர். இன்றிரவு நாங்கள் திறந்த இருதயங்களுடன் வருகிறோம்; நாங்கள் பசிதாகமுள்ளவர்களாய் வருகிறோம். நீர் உம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவீர் என்று அறிந்திருக்கிறோம். இந்த வேதாகமத்தை திறந்து, அதன் பரிசுத்த பக்கங்களில் அடங்கியுள்ளவைகளை நாங்கள் படிக்க முயலும் இந்நேரத்தில், பரிசுத்த ஆவியானவர் தாமே, அதை ஒவ்வொரு இருதயத்துக்கும் கொண்டு செல்வாராக. அந்த விதை ஆழமான, மிகுதியான விசுவாசத்தில் விழுந்து, வார்த்தை அளித்துள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் பிறப்பிப்பதாக. கர்த்தாவே, எங்களுக்கு செவிகொடும், எங்களைக் கழுவும், எங்களை சோதித்துப் பாரும். கர்த்தாவே, எங்களில் அசுத்தமான ஏதாகிலும் அறிக்கை செய்யப்படாத பாவம் ஏதாகிலும், தவறான ஏதாகிலும் காணப்படுமானால், இப்பொழுதே அதை வெளிப்படுத்தித்தாரும். (நாங்கள் நேரடியாக அதை சரிசெய்து கொள்வோம்). ஏனெனில் நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் வருகையின் நிழல்களில் வாழ்கிறோம் என்பதை உணருகிறோம். ஓ, பரிசுத்த பிதாவே, இன்றிரவு நாங்கள் உமது நியாயத்தின் நிழல்களில் வந்துள்ளோம். நாங்கள் புது அர்ப்பணிப்புக் காகவும், பிரதிஷ்டைக்காகவும், எங்கள் வாழ்வில் பரிசுத்த ஆவியின் நிறைவுக்காகவும் கெஞ்சுகிறோம். எழுப்புதல் அக்கினி மங்குவதை நாங்கள் காணும்போது, வார்த்தை என்னும் விறகை நாங்கள் அதில் எறிந்து, அது புது அக்கினியை மூட்டவும், எங்கள் இருதயங்கள் வைராக்கியத்தினால் நிறையவும் அருள் புரியும். கர்த்தாவே, உமது விலையுயர்ந்த வார்த்தையினாலும், இரத்தத்தினாலும் எங்களை பரிசுத்தப்படுத்தும். உமது கிருபைக்காக கெஞ்சுகிறோம். எல்லா துதியும் கனமும் உமக்கே உரித்தாகுக. எங்கள் இருதயத்திலிருந்து தவறான எண்ணம் அனைத்தையும் எடுத்துப்போடும். ஓ, கர்த்தாவே. எங்களை சுத்திகரியும். எங்களுக்கு சுத்த இருதயங்களையும், சுத்தகைகளையும், சுத்த சிந்தைகளையும் தந்து, நாங்கள் ஒவ்வொரு இரவும் உமது பிரகாரத்தில் பரிசுத்த ஆவியின் நிறைவு டையவர்களாய் களிப்புடன் வர அருள்புரியும். இதை இயேசுவின் நாமத்திலும், அவருடைய நிமித்தமாகவும் கேட்கிறோம். ஆமென். 11.இப்பொழுது வார்த்தையைப் படிக்க விரும்புகிறேன். நீங்கள் விரும்பினால், உங்கள் வேதாகமங்களையும், வேத வசனங்களைக் குறித்துக் கொள்ள உங்கள் பென்சில்களையும், உங்கள் காகிதங்களையும் கொண்டுவரும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அது மிகவும் நன்றாயிருக்கும். ''பரிசுத்த ஆவி என்பது என்ன?'' என்னும் கேள்விக்கு பதில் கூறும் அல்லது பதில் கூறத்துவங்கும் வகையில், நீங்கள் அப்போஸ்தலருடைய நடபடிகள் 7-ம் அதிகாரத்துக்கு திருப்பிக்கொண்டிருக்கும் போது........ சாத்தானை தோற்கடிக்க வேறொன்றும் கிடையாது. தேவனுடைய வார்த்தையைப் போல் இவ்வுலகில் சாத்தானைத் தோற்கடிக்க வேறொன்று மில்லை. இயேசு தமது மகத்தான யுத்தத்தில் அதை உபயோகித்தார். அவர் எழுதியிருக்கிறதே...' என்றார். 12.சில நாட்களுக்கு முன்பு ஒரு ஒலிபரப்பை கேட்டுக் கொண்டிருந்தேன். சில சாம்பல்கள் - சில பாஸ்பேட்டுகள் பூமியின் சில இராசயனங்கள் - பறந்து ஒன்றாக சேர்ந்து சிருஷ்டிப்பு உண்டானதாகவும், வெப்பமான சூரிய வெளிச்சம் ஜீவக்கிருமிகளை உண்டாக்கி, ஜீவனைத் தோன்றச் செய்ததென்றும் அது கூறினது... சூரிய வெளிச்சம் எந்த ஜீவக் கிருமிகளையும் கொன்றுவிடும். அப்படியிருக்க, இது எவ்வளவு கேலிப்பரிகாசமானது! ஒரு ஜீவக் கிருமியை சூரிய வெளிச்சத்தில் வைத்துப் பாருங்கள், அது உடனே அதை கொன்றுவிடும். சாத்தான் அதை எனக்கு வலியுறுத்துவதைத் தவிர வேறொன்றுமில்லை. இன்று காலை நான் சிறுமி ரெபேக்காளை பள்ளிக்கூடத்தில் விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, நான் ரேடியோவை போட்டேன். அந்த ஒலிபரப்பை நான் மறுபடியும் கேட்கவேண்டி வருமோ என்று எண்ணி, ரேடியோவை அணைத்து விட்டேன். நான் வீதியிலே காரோட்டிச் சென்று கொண்டிருந்த போது, சாத்தான் என்னிடம், ''நீ இயேசு என்றழைக்கும் இந்த மனிதன், அவருடைய காலத்தில், பில்லி கிரகாம் அல்லது ஓரல் ராபர்ட்ஸை போன்று ஒரு சாதாரண மனிதனே . ஆனால் அவரை சில ஜனங்கள் சூழ்ந்து, அவர் பெரிய மனிதன்' என்று கூறும்படி செய்தனர். சிறிது கழித்து அவர் பெரியவராகி, முடிவில் அவர் அவர்களுக்கு தேவனாகி விட்டார். இப்பொழுது, அவர் இறந்த பின்பு, அது உலகம் முழுவதும் பரவியது. அவ்வளவு தான்“ என்றான். 13.நான், 'நீ எவ்வளவு ஒரு பொய்யன்'' என்று நினைத்துக் கொண்டேன். நான் கிரகாம் தெருவைக் கடந்தபோது திரும்பினேன். நான், சாத்தானே, நீ என் உள்ளுணர்வுடன் பேசுகின்றாய், உன்னை சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். வருவார் என்று எபிரேய தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த அவர் யார்? அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியா யார்? ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அவரை முன்கூட்டி கண்டு, அவர் இவ்வுலகில் தோன்றும் முன்பே அவருடைய வாழ்க்கையைக் குறித்து கூறின இந்த மனிதர்களின் மேல் என்ன தங்கிருந்தது? ஒரு எழுத்தும் கூட பிசகாமல் அதை முன்னுரைத்தவர் யார்? அவர் வரும் போது, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்படுவார்'' (ஏசா.53:12) என்று அவர்கள் கூறினர். அதேப் போன்று அவர் எண்ணப்பட்டார். 'நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார்' என்றனர் (ஏசா. 53:5). அவர் அந்தப்படியே காயப்பட்டார். அவர் ஐசுவரியவானோடே தம்முடைய பிரேதக்குழியை நியமித்தார். ஆனால் அவர் மூன்றாம் நாள் எழுந்திருப்பார். அந்தப்படியே அவர் எழுந்திருந்தார். அவர் பரிசுத்த ஆவியை வாக்கருளினார்; அதை நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன். எனவே என்னை விட்டு அப்பாலே போ ஏனெனில் அது வார்த்தையில் எழுதப்பட்டுள்ளது, ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாயுள்ளது' என்றேன். அவன் என்னை விட்டுப்போனான். அவனிடம் வார்த்தையைக் கூறுங்கள், அது கிரியை செய்யும். அவனால் வார்த்தையைப் பொறுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் அது பரிசுத்த ஆவியின் ஏவுதலால் அளிக்கப்பட்டது. இன்றிரவு அப்போஸ்தலருடைய நடபடிகள் 7-ம் அதிகாரத்திலிருந்து படிப்போம். பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியாயிருக்கிறது என்று கேட்டான்? அதற்கு அவன் சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிற தற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டில் “இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி: நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப்புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா ' என்றார். “அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தை விட்டுப் புறப்பட்டு, காரானூரிலே வாசம்பண்ணினான். அவனுடைய தகப்பன் மரித்த பின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை . அழைத்துக்கொண்டு வந்து குடியிருக்கும்படி செய்தார். இதிலே ஒரு அடி நிலத்தையாகிலும் அவனுடைய கையாட்சிக்குக் கொடாம லிருக்கையில், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதைச் சுதந்தரமாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம் பண்ணினார். அந்தப்படி தேவன் அவனை நோக்கி உன் சந்ததியார் அந்நிய தேசத்தில் சஞ்சரிப்பார்கள் அத்தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி நானூறு வருஷம் துன்பப்படுத்துவார்கள். அவர்களை அடிமைப்படுத்தும் ஜனத்தையோ நான் ஆக்கினைக்குட்படுத்துவேன். அதற்கு பின்பு அவர்கள் புறப்பட்டு வந்து இவ்விடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார். மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்ற போது, எட்டாம் நாளிலே அவனை விருத்தசேதனம் பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப் பிதாக்களையும் பெற்றார்கள்.' 14.இந்த இடத்திலே நாம்: பரிசுத்த ஆவி என்பது என்ன? அது என்ன? என்னும் பொருளை அணுக விரும்புகிறோம் (அது இன்றைய மிகவும் முக்கியமான பொருள் என்று கருதுகிறேன்). இந்த பொருளை வரிசைக்கிரமமாக நான் எடுத்துக்கொண்டுள்ள காரணம் என்னவெனில்: பரிசுத்த ஆவி என்னவென்று நீங்கள் அறியாமல் அதை பெற்றுக்கொள்ள முடியாது. அது என்னவென்று அறிந்த பிறகும், அது உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அது உங்களுக்கே என்று நீங்கள் விசுவாசியாமல் போனால், அதை பெற்றுக்கொள்ள முடியாது. அது என்ன பலன்களை அளிக்கும் என்று உங்களுக்கு தெரியாமல் போனால், அதை நீங்கள் பெற்றுக்கொண்டீர்களா இல்லையாவென்று அறிய முடியாது. எனவே அது என்னவென்று, அது யாருக்கு அருளப்படுமென்றும், அது வரும்போது என்ன கிரியை நடப்பிக்கும் என்றும் நீங்கள் அறிவீர்களானால், அதை நீங்கள் பெறும்போது எதைப் பெற்றுக்கொண்டீர்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள். பாருங்கள்? அது அதை முடித்து விடுகிறது. 15.இன்று நான் நம்முடைய சகோதரன் ஜெஃப்ரீஸிடம் பேசிக்கொண்டிருந்தது போல். அவர், “இன்றிரவு கூட்டத்துக்கு வர எனக்கு விருப்பம், நான் நாளை இரவு வருகிறேன்'' என்றார். கூட்டம் நடந்து கொண்டிருக்கிற தென்று அவர் அறியவில்லை. ஏனெனில் நாங்கள் இங்கு அதை அறிவிக்கவில்லை சிலர்... சகோ.லியோவும் மற்றவர்களும் இப்பட்டினத்திற்கு வெளியிலுள்ள சில நண்பர்களுக்கு எழுதி அறிவித்தனர். நமக்கு இடம் இல்லை என்ற காரணத்தால்... நான் அவரிடம், ''சகோ. ஜெஃப்ரீஸ், உங்கள் எண்ணெய் கிணறுகளில் ஒன்றைத் தோண்டும்படி என்னை நீர் அனுப்பி, எனக்கு அதைக் குறித்து ஒன்றும் தெரியவில்லையென்றால், அது வெடிக்கும்படி செய்து விடுவேன். நான் தவறான சாவியைத் திருப்பி விடுவேன், அல்லது தவறான மோட்டாரை ஓட்டி விடுவேன். அதை எப்படி செய்ய வேண்டுமென்று நான் முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும்'' என்றேன். பரிசுத்த ஆவியைப் பெறுதலும் அவ்வாறே யுள்ளது. நீங்கள் எதற்காக வருகிறீர்கள் என்றும், எப்படி அதை பெற்றுக்கொள்ள வேண்டும்மென்றும், அது என்னவென்றும் அறிந்திருக்க வேண்டும். 16.இப்பொழுது, முதலாவதாக, பரிசுத்த ஆவி வாக்களிக்கப்பட்டுள்ளது. நாம் பத்து வாரங்களாக பரிசுத்த ஆவி என்பது என்ன? என்னும் பொருளைக் குறித்து பேசி, அதே சமயத்தில் அதன் ஓரத்தைக் கூட தொடமல் போகலாம். ஆனால் முதலாவதாக, ஒவ்வொரு இரவும் சுருக்கமானவர்ணனை (outline) கொடுக்கும் அளவுக்கு அதை அணுகி, அதற்கடுத்த இரவு ஏதாகிலும் கேள்விகள் உண்டா என்று பார்க்கலாம். இங்குள்ள எத்தனை பேர் பரிசுத்த ஆவியைப் பெறாமல் இருக்கின்றனர். பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்படாமல் இருக்கின்றனர்? உங்கள் கைகளையுயர்த்துங்கள். நீங்கள் அபிஷேகம் பண்ணப்படவில்லையென்று அறிந்துள்ளவர்கள்... கைகளைப் பாருங்கள்! பரிசுத்த ஆவி ஒரு அடையாளமாயுள்ளதைக் குறித்து நான் பேச விரும்புகிறேன். அது ஒரு அடையாளம். எல்லா வாக்குத்தத்தங்களுமே நமக்கு ஆபிரகாமின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது என்று அறிகிறோம். ஆபிரகாம் வாக்குத்தத்தத்தின் தகப்பன். ஏனெனில் தேவன் வாக்குத்தத்தத்தை ஆபிரகாமுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் கொடுத்தார். வாக்குத்தத்தமானது ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் அளிக்கப்பட்டது. இந்த அடையாளம் உடன்படிக்கையின் மக்களுக்கே! 17.கிறிஸ்தவனுக்கும் பரிசுத்த ஆவியினால் நிறைந்த கிறிஸ்தவனுக்குமிடையே நிறைய வித்தியாசம் உண்டு. இதை நாம் வேதத்திலிருந்து எடுத்து வேதவாக்கியங்களுடன் பொருத்துவோம். முதலாவதாக, கிறிஸ்தவன் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஒருவன் உண்டு. ஆனால் இந்த கிறிஸ்தவன் பரிசுத்த ஆவியினால் இன்னும் நிறையப்படாவிட்டால், அவன் கிறிஸ்தவனாகிக் கொண்டிருக்கும் போக்கில் (Process) இருக்கிறான் பாருங்கள்? அவன் அதை விசுவாசிப்பதாக கூறுகிறான், அதற்கென அவன் கிரியை செய்கிறான், ஆனால் தேவன் அவனுக்கு பரிசுத்த ஆவியை இன்னும் கொடுக்கவில்லை. அவன் தேவனுடன், தேவன் அடையாளம் கண்டுகொள்ளும் அந்த இலக்கை இன்னும் அடையவில்லை. 18.தேவன் ஆபிரகாமை அழைத்த பிறகு, அவனுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். அது இன்று விசுவாசி அழைக்கப்படும்வதற்கு ஒரு முன்னடையாளமாய் உள்ளது .... அவர் ஆபிரகாமை அழைத்தார். ஆபிரகாம் தன் தேசத்தை விட்டுப் புறப்பட்டு அந்நிய தேசத்துக்கு சென்று அந்நிய ஜனங்களிடையே வாசம் பண்ணினான். தேவன் ஒரு மனிதனை, அவன் நீசத்தனத்தை நிறுத்தி, தன் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்ட அழைப்பதற்கு அது உதாரணமாயுள்ளது. அவன் தான் வாழ்ந்து கொண்டிருந்த கூட்டத்தை விட்டு வெளிவந்து, ஒரு புதுக்கூட்டத்தில், புதுவிதமான ஜனங்களுடன் வாழ்கின்றான். தேவன், தாம் ஆபிரகாமுக்கு அளித்த வாக்குத்தத்தத்துக்கு அவன் உண்மையாயிருந்தான் என்று கண்டபோது (அதாவது அவனுக்கு ஒரு பிள்ளை பிறப்பான் என்றும், அந்த பிள்ளையின் மூலம் உலகம் முழுவதுமே ஆசீர்வதிக்கப்படும் என்னும் வாக்குத்தத்தம்), அவர் அவனுக்கு ஒரு அடையா ளத்தை கொடுத்து அவன் விசுவாசித்தை உறுதிப்படுத்தினார். அந்த அடையாளம், விருத்தசேதனம் பரிசுத்த ஆவிக்கு உதாரணமாயுள்ளது. நாம் இப்பொழுது படித்த அதிகாரத்தில், அடுத்த வசனத்தில் . நீங்கள் குறித்துக்கொள்ள விரும்பினால்... 51-ம் வசனத்தில் ஸ்தேவான், வணங்காக் கழுத்துள் ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப் போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள்“ என்றான். 19.விருத்தசேதனம் பரிசுத்த ஆவிக்கு ஒரு உதாரணமாயுள்ளது. ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தை ஏற்றுக்கொண்டு, ஒரு அந்நிய தேசத்துக்கு புறப்பட்டு சென்ற பிறகு, தேவன் அவனுக்கு விருத்தசேதனம் என்னும் அடை யாளத்தைக் கொடுத்தார். பாருங்கள்? அது ஒரு அடையாளம். அவனுடைய பிள்ளைகளும் அவனுக்குப் பின்வரும் சந்ததியும் தங்கள் மாமிசத்தில் இந்த அடையாளத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் அது அவர்கள் வேறுபிரிக்கும் அடையாளம். விருத்த சேதனம் என்னும் இந்த அடையாளம், அவர்களை மற்ற ஜனங்களிடமிருந்து வேறு பிரித்தது. அதைத்தான் தேவன் இன்று உபயோகிக்கிறார். இருதயம் விருத்தசேதனமான தன் அடையாளமாக பரிசுத்த ஆவி உள்ளது. அது தேவனுடைய சபையை மற்றெல்லா கோட்பாடுகளின்றும், ஸ்தாபனங்க ளின்றும் வேறு பிரிக்கிறது. பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள் எல்லாவிதமான ஸ்தாபனங்களிலும் உள்ளனர். இருப்பினும் அவர்கள் பிரித்தெடுக்கப்பட்ட மக்களே. 20.என்னை ஒரு மனிதனிடம் நீங்கள் இரண்டு நிமிடம் பேச அவகாசம்! கொடுத்தால், அவன் பரிசுத்தஆவியைப் பெற்றுள்ளானா இல்லையா என்று கூறிவிடுவேன். அவ்வாறே நீங்களும் கூறிவிடலாம். அது அவர்களைப் பிரித்தெடுக்கிறது. அது ஒரு குறி. அது ஒரு அடையாளம், பரிசுத்த ஆவி ஒரு அடையாளம். அது ... பரிசுத்த ஆவிக்கு பழைய ஏற்பாட்டில் நிழலாயுள்ள விருத்தசேதனத்தை செய்துகொள்ள மறுக்கும் எந்த பிள்ளையும் ஜனங்களின் மத்தியில் இராதபடி அறுப்புண்டு போனான். அவன் விருத்தசேதனம் செய்ய மறுத்தால், சபையோரிடம் ஐக்கியம் கொள்ளக்கூடாது. அதை இன்றைய நாளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற மறுக்கும் எவனும், பரிசுத்த ஆவியைப் பெற்றவர்களிடையே ஐக்கியம் கொள்ளக்கூடாது. இதுபோன்று ... என் தாய், “ஓரே விதமான சிறகுடைய பறவைகள் ஒன்று கூடும்” என்று கூறுவது வழக்கம். அது ஒரு பழைய காலத்து பழமொழி. ஆனால் அது உண்மையானது. நீங்கள் புறாக்களும் காகங்களும் ஐக்கியங் கொள்வதைக் காணமுடியாது. அவை உண்ணும் ஆகாரம் வித்தியாசமானது. அவைகளுடைய பழக்கவழக்கங்கள் வித்தியாச மானவை, அவைகளுடைய விருப்பங்கள் வித்தியாச மானவை. அப்படித்தான் உலகத்துக்கும் பரிசுத்த ஆவியைப்பெற்று விருத்தசேதனம் செய்யப்பட்ட கிறிஸ்தவனுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. விருத்தசேதனம் என்றால் மாமிசத்தை அறுத்தல் என்று அர்த்தம். 21.ஆண்களுக்கு மாத்திரமே விருத்தசேதனம் பண்ண முடியும். ஆனால் ஒரு பெண் ஆணை மணந்தால், அவள் அவனுடைய ஒரு பாகமாகி, அவளும் விருத்தசேதனம் செய்யப்பட்டதாக கருதப்பட்டாள். தீமோத்தேயு எழுதின நிருபத்தில் 'அப்படியிருந்தும், அவள் தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும், பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளை பேற்றினால் இரட்சிக்கப்படுவாள்'' என்று கூறப்பட்டுள்ளது உங்களுக்கு ஞாபகமிருக்கும் (1 தீமோ.2:15) இப்பொழுது, விருத்தசேதனம்... தூதனின் செய்தியை கேட்டு அவனுக்குப் பின்னால் கூடாரத்திலிருந்த சாராள் நகைத்தாள் என்று உங்களுக்குத் தெரியும். தூதன்,''ஆபிரகாமே (அவன் யாரென்று ஆபிரகாம் அறியவில்லை. அவன் ஒரு அந்நியன்), உன் மனைவி சாராள் எங்கே?'' என்று கேட்டான். அவனுக்கு மனைவி இருந்தாள் என்று தூதனுக்கு எப்படி தெரியும்? இயேசு, “லோத்தின் நாட்களிலும் நடந்தது போல மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்'' என்றார். அந்த அடையாளம் மார்க்க சம்பந்தமான வர்களின் உலகமாகிய சோதோம் கொமோராவுக்கு அருளப்படாமல், தெரிந்து கொள்ளப்பட்டு, வெளியே அழைக்கப்பட்டவர்களுக்கு மாத்திரமே அளிக்கப் பட்டது. ஆபிரகாம் வெளியே அழைக்கப்பட்டான். 'சபை' என்னும் வார்த்தை வெளியே அழைக்கப்பட்டு, பிரித்தெடுக்கப்பட்டது' என்று பொருள்படும். ஆபிரகாம் தன்னை பிரித்துக்கொண்டு விருத்தசேதனம் பண்ணப்பட்டது போல் சாராள் தூதனின் செய்தியைக் கேட்டு நகைத்தபோது, தேவன் அவளை அந்த இடத்திலேயே கொன்றிருப்பார். ஆனால் அவர் ஆபிரகாமைக் கஷ்டப்படுத்தாமல் சாராளைக் கஷ்டப்படுத்த முடியாது. ஏனெனில் அவர்கள் ஒருவரே. அவள் அவனுடைய பாகமாயிருந்தாள். நீங்கள் இனி இருவரல்ல, ஒருவரே. 22.எனவே இன்று பரிசுத்த ஆவி இருதயத்தை விருத்தசேதனம்! செய்கிறது. அது அடையாளம், அளிக்கப்பட்ட அடையாளம். அன்றொரு நாள் ஒருவர் கூறினார். இதை நான் அப்படியே எடுத்துரைக்கிறேன், ஹாஸ்யமாக அல்ல, ஏனெனில் அது உண்மை . ஆனால் அது ஹாஸ்யம் போல் தோன்றுகிறது. நான் அடிக்கடி கூறுவது போன்று, ''இது ஹாஸ்யத்துக்கு இடமல்ல. 'நாம் இப்பொழுதுள்ள மேற்கு கடற்கரையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒருவன் இருந்தான். அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றான். அவன் தெருவில் சற்று தூரம் நடந்து சென்று, தன் கைகளையுயர்த்தி, அந்நியபாஷை பேசுவான். பிறகு அவன் ஓடுவான். குதிப்பான், கூச்சலிடுவான். அவன் வேலைத்துறையிலும் இவ்வாறு செய்து வந்தான். அவனுடைய முதலாளி அவனிடம் “நீ எங்கு சென்றிருந்தாய்?'' என்று கேட்டார். (நீ சென்ற இடங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் அவர், ஒரு கூட்டம் நட்'டுகள் (nuts) உள்ள இடத்திற்கு நீ சென்றிருப்பாய்'' என்றார். (அதாவது மூளை கோளாறு ஏற்பட்டுள்ளவர்களிடம் -தமிழாக்கியோன்) அவன், 'அவர்கள் நட்டுகள் என்ற நினைக்கிறீர்' என்று கேட்டான். அவர், 'நிச்சயமாக அவர்கள் அப்படித்தான்'' என்றார். அவன், “நல்லது, 'நட்' டுக்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். உங்களுக்குத் தெரியுமா? நட்டுகள் முக்கிய பாகம் வகிக்கின்றன, உதாரணமாக மோட்டார் வாகனங்களில் நீங்கள் எல்லா நட்டுகளையும் கழற்றி விட்டால், உங்களுக்கிருப்பது வெறும் உபயோக மில்லாத பொருளே'' என்றான். அது உண்மை. 23.பரிசுத்த ஆவி உங்கள் மேல் வரும் போது, நீங்கள் வித்தியாசம்மாகி விடுகின்றீர்கள். அப்பொழுது இவ்வுலகத்தின் சிந்தைக்கு உங்களைப் பிடிக்காது. அவர்கள் உங்களுக்கு விரோதமாகி விடுகின்றனர். அவர்கள் உங்களுடன் எவ்வித தொடர்பும் கொள்ள விரும்புவதில்லை. நீங்கள் வேறொரு உலகில் பிறந்து விடுகின்றீர்கள். நீங்கள் அந்நியராகி விடுகிறீர்கள் - வெகு தூரத்திலுள்ள ஆப்பிரிக்கா காடுகளில் உள்ளதைக் காட்டிலும் பதின் மடங்கு அந்நியர். பரிசுத்த ஆவி வரும்போது, நீங்கள் வித்தியாசமா கின்றீர்கள். அது ஒரு அடையாளம். அது ஜனங்களின் மத்தியில் ஒரு குறியாக (Mark) உள்ளது. நீங்கள், சகோ. பிரான்ஹாமே, விருத்தசேதனம் என்னும் அடையாளம் ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் தான் கொடுக்கப்பட்டது'' எனலாம். அது உண்மை ஆம், சரி. 24.இப்பொழுது நாம் கலாத்தியர் 3-ம் அதிகாரம் 29-ம் வசனத்துக்கு வேதாகமத்தைத் திருப்பி, அது எப்படி நமக்கு பொருந்தும் என்று காணலாம். கலாத்தியர் 3:29. எப்படி இந்த விருத்தசேதனம் புறஜாதியாராகிய நமக்கு பொருந்தும் என்று. நாம் இயற்கை பிறவியில் புறஜாதியாரே. இப்பொழுது முதலாம்... நான் 16-ம் வசனத்தை படிக்க விரும்புகிறேன். ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன. ... (ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும்) .... சந்ததிகளுக்கு என்று அநேகரைக் குறித்துச் சொல்லாமல்...எப்படியோ ஒருவிதமாக, 'நானும் ஆபிரகாமின் சந்ததிகளைச் சேர்ந்தவன்'' என்று சொல்வதல்ல. இல்லை! சந்ததிக்கு ஆபிரகாமின் சந்ததிக்கு, சந்ததிகளுக்கு அல்ல... உன் சந்ததிக்கு என்று ஒருவனைக் குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே. கிறிஸ்து ஆபிரகாமின் சந்ததி. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. இப்பொழுது நாம் 28-ம், 29-ம் வசனங்களுக்குச் செல்வோம். யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமை யென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின், சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள். நாம் எப்படி ஆபிரகாமின் சந்ததியாராகிறோம்? கிறிஸ்துவுக்குள் இருப்பதன் மூலம். அப்பொழுது நாம் ஆபிரகாமின் சந்ததியாராகி விடுகிறோம். ஆபிரகாமின் சந்ததி என்பது என்ன? நாம் ரோமர் 4லும், இன்னும் வேதாகமத்தில் வேவ்வேறு இடங்களுக்குச் சென்று அதை காணலாம். ஆபிரகாம் விருத்தசேதனம் செய்யப்பட்டபோது, வாக்குத்தத்தத்தைப் பெற வில்லை. விருத்தசேதனம் ஒரு எடுத்துக்காட்டு மாத்திரமே என்று காண்பிக்க, அவன் விருத்தசேதனம் பண்ணப்படுவதற்கு முன்பே வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொண்டான். விருத்தசேதனம் பண்ணப்படு வதற்கு முன்பு அவன் பெற்றிருந்த விசுவாசத்தை அங்கீகரித்ததன் அடையாளமாக அது திகழ்ந்தது. 25.நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கும்போது, நாம் ஆபிரகாமின் சந்ததியாராயும் கிறிஸ்துவுடன் சுதந்தரராயும் இருக்கிறோம்; நாம் யாராயிருந்தாலும் சரி, யூதரானாலும் கிரேக்கரானாலும்... ஆபிரகாமின் சந்ததியார் ஆபிரகாமின் விசுவாசத்தை பெற்றுள்ளனர்; ஆபிரகாம் தேவனுடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொண்டு விசுவாசித்தான். அது எவ்வளவு கேலி பரிகாசமாக காணப்பட்ட போதிலும், அது வழக்கத்துக்கு மாறாக உங்களை நடந்துகொள்ளச் செய்தபோதிலும், அது உங்களை எவ்வளவு விசித்திரமாக ஆக்கினாலும், எதையும் பொருட்படுத்தாமல் நீங்கள் தேவனுடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொண்டு விசுவாசிப்பீர்கள். ஆபிரகாமுக்கு எழுபத்தைந்து வயதும், சாராளுக்கு அறுபத்தைந்து வயதுமானபோது, அவன் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு விசுவாசித்து, அதற்கு மாறானவை அனைத்தையும் அவை இல்லாதது போல் அழைத்தான். அன்றைய காலத்து மருத்துவர்கள் அதைக் குறித்து என்ன நினைத்திருப்பார்கள் என்று எண்ணுகிறீர்கள்? எழுபத்தைந்து வயது நிரம்பிய கிழவன் ஒருவன், அறுபத்தைந்து வயது நிரம்பின ஸ்திரீகளுக்குள் வழிபாடு நின்று போய் இருபத்தைந்து ஆண்டு கடந்த தன் மனைவியின் மூலம் ஒரு குழந்தையைப் பெறப்போவதாகக் கூறிக்கொண்டு தேவனைத் துதிப்பதைக் கண்டபோது, அக்காலத்து ஜனங்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்று எண்ணுகிறீர்கள்? ஆபிரகாமின் விசுவாசம் அவனை விசித்திரமாக நடந்துகொள்ளச் செய்தது. 26.நீங்கள் பரிசுத்த ஆவியினால் விருத்தசேதனம் பண்ணப்படும் போது, அது உங்களுக்கும் அதையே செய்கிறது. நீங்கள் செய்வீர்கள் என்று நினைக்காத செயல்கள் எல்லாம் நீங்கள் செய்யும்படி அது செய்கிறது. நீங்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தை ஏற்றுக்கொண்டு, தேவனை விசுவாசிக்கும்படி அது செய்கிறது. அது ஒரு வாக்குத்தத்தமும் அடையாளமும் மாத்திரமேயன்றி, ஒரு முத்திரையும் கூட. நீங்கள் என்னுடன் ரோமருக்கு செல்வீர்களானால்... முதலில் நீங்கள் என்னுடன் எபேசியர் 4:30க்கு செல்ல விரும்புகிறேன். அதை ஒரு நிமிடம் படிப்போம். அது இப்படி கூறுகிறது. வெவ்வேறு காரியங்கள் முத்திரைகளாக இருப்பதாக அநேகர் கூற நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். ''நீங்கள் சபையைச் சேர்த்து கொண்டால், சபையின் முத்திரையை பெற்றுக் கொள்கிறீர்கள்'' என்று சிலர் கூறுகின்றனர். மற்றும் சிலர், ஒருகுறிப்பிட்ட நாளை ஓய்வுநாளாக ஆசரித்தால், 'அதுவே தேவனுடைய முத்திரை' என்கின்றனர். இன்னும் சிலர், ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்தில் நாம் அங்கத்தினராக சேர்ந்து கொண்டால், நாம் தேவனுடைய ராஜ்யத்துக்குள் முத்திரையிடப்படுகிறோம் என்கின்றனர். ஆனால் வேதமோ, “தேவனே, சத்தியபார், எந்த மனுஷனும் பொய்யன்'' என்றுரைக்கிறது (ரோமர் 3:4). 27.எபேசியர் 4:30 இவ்வாறு உரைக்கிறது. ''அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்'' இதைக்குறித்து நான் சற்று கடினமாக பேசி, அதை உங்கள் முன்னிலையில் வைக்கப்போகின்றேன்... சட்டங்களைக் கையாளும் சகோதரரே (legalists), சற்று அமைதியாயிருங்கள். இந்த முத்திரை எவ்வளவு காலம் நீடிக்கிறது என்பதை கவனித்தீர்களா? அடுத்த எழுப்புதல் வரைக்கும் அல்ல, அல்லது ஏதாவதொன்று தவறாகும் வரைக்கும் அல்ல, ஆனால் “மீட்கப்படும் நாள் வரைக்கும்” அத்தனை காலம் வரைக்கும். நீங்கள் முத்திரிக்கப்படுகிறீர்கள் மீட்கப்படும் நாள் வரைக்கும் அந்த நாளில் நீங்கள் மீட்கப்பட்டு தேவனுடன் கூட இருப்பீர்கள். அத்தனை காலம் வரைக்கும் பரிசுத்த ஆவி உங்களை முத்திரிக்கிறார். ஒரு எழுப்புதல் கூட்டத்திலிருந்து மறு எழுப்புதல் கூட்டம் வரைக்கும் அல்ல, ஆனால் நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும் நீங்கள் பரிசுத்த ஆவியினால் முத்திரை போடப்பட்டிருக்கிறீர்கள். அதைத்தான் பரிசுத்த ஆவி செய்கிறது. அது தேவனுடைய முத்திரை. நீங்கள் தேவனுடைய பார்வையில் கிருபை பெற்றீர்கள். அவர் உங்களை நேசிக்கிறார், உங்களை நம்புகிறார், உங்கள் மேல் தமது முத்திரையை போட்டிருக்கிறார். முத்திரை என்றால் என்ன? முத்திரை' என்னும் சொல் முடிவு பெற்ற ஒரு பணியை குறிக்கும். ஆமென்! தேவன் உங்களை இரட்சித்து, உங்களை பரிசுத்தப்படுத்தி, உங்களை சுத்திகரித்து உங்கள் மேல் தயை பாராட்டி உங்களை முத்தரித்து விட்டார். அவர் முடித்துவிட்டார் மீட்கப்படும் நாள் வரைக்கும் நீங்கள் அவருடைய பொருளாகிவிடுகிறீர்கள். முத்திரை முடிவு பெற்ற செயலைக் குறிக்கிறது. பரிசுத்த ஆவி என்பது என்ன? அது ஒரு அடையாளம், சிறிது கழிந்து வேறொரு செய்தியில் அதைக் குறித்து நாம் பேசப்போகிறோம் - பவுல் குறிப்பிட்ட அடையாளம். அந்நிய பாஷை பேசுதல் விசுவாசிகளுக்கு அடையாளமாயிருந்தது .... அல்லது அவிசுவாசிகளுக்கு. 28.இப்பொழுது, கவனியுங்கள், பரிசுத்த ஆவி ஒரு அடையாளம். பரிசுத்த ஆவி ஒரு முத்திரையும் கூட. அது தேவன் தாம் தெரிந்து கொண்ட பிள்ளைகளுக்கு கொடுத்த அடையாளம். அதை புறக்கணித்தால், ஜனங்களின் மத்தியிலிருந்து அறுப்புண்டு போகவேண்டும். அதை ஏற்றுக்கொண்டால், உலகத்தையும் உலகத்திலுள்ள காரியங்களையும் அப்புறப்படுத்தி, தேவனுடைய பொருளாகி விடுதல். அதற்கு அங்கீகாரமாக தேவன் முத்திரையை அதன் மேல் போடுகிறார். நான் முன்பு ஹாரி வாட்டர் பரி ரெயில் நிர்வாகத்தில் பணி புரிந்தேன். நாங்கள் சென்று சரக்கு ரெயில் பெட்டிகளை நிறைப்பது வழக்கம். பின்னால் நின்று கொண்டிருக்கும் என் சகோதரன் டாக்' (Doc) எனக்கு உதவி செய்வார். பெட்டிகளை நிறைத்துக் கொண்டிருக்கும்போது, ஆய்வாளர் (Inspector) அதை பரிசோதிப்பார். அதை நெருக்கமாக நிறைக்காமல் தளர்ந்து நிறைத்துள்ளதால் சரக்குகள் விழுந்து உடையக்கூடும் என்று அவர் கண்டால், அல்லது அவை ஒன்றொடொன்று மோதி நொறுங்கிவிடும் என்று அவர் எண்ணினால், அவர் அந்த பெட்டிக்கு முத்திரை போடமாட்டார். சரக்குகளை நெருக்கமாக பெட்டியில் அடுக்கி, எல்லாம் சரியாயுள்ளதென்றும், ரெயில் ஓடும் போது ஏற்படும் குலுக்கலினால் உள்ளேயுள்ள சரக்குகளுக்கு சேதம் ஒன்றும் ஏற்படாது என்றும் தீர்மானித்த பிறகே அதற்கு முத்திரை போடுவார்.' 29.அதுதான் காரியம். நாம் முத்திரை போடப்படாத தன் காரணம், நாம் காரியங்களில் நெருக்கமில்லாமல் மிகவும் தளர்ந்தவர்களாய் காணப்படுகிறோம். ஆய்வாளர் உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும்போது, உங்கள் ஜெப ஜீவியத்தில், உங்கள் சுபாவத்தில், நீங்கள் மற்றவர்களைக் குறித்து அவதூறாய் பேசும் விஷயத்தில் உங்களைத் தளர்ந்தவராகக் கண்டால், அந்த பெட்டிக்கு அவர் முத்திரை போடமாட்டார். சில அசுத்தமான பழக்க வழக்கங்கள், சில இழிவான செயல்கள், சில மோசமான எண்ணங்கள், அவரால் பெட்டிக்கு முத்திரை போட முடியாது. ஆனால் ஆய்வாளர் எல்லாம் அதனதன் இடத்தில் இருக்கிறது என்று கண்டால், இப்பொழுது அவர் முத்திரை போடுவார். அது அடைய வேண்டிய இடத்தை அடையும் வரைக்கும், முத்திரையை உடைக்க யாருக்கும் தைரியம் இருக்காது, பார்த்தீர்களா? “நான் அபிஷேகம் பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், முத்திரை போடப்பட்ட இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்க அல்லது அசைக்க முயல்பவன் எவனோ, அவனுடைய கழுத்தில் எந்திரக் கல்லைக்கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்'' (சங்.105:15; மத்.18:6) அது என்ன கூறுகிறதென்றும் பார்த்தீர்களா? 30.பரிசுத்த ஆவி என்பது அது தான். அது உங்கள் உறுதி (Assurance); அது உங்கள் பாதுகாப்பு; அது உங்கள் சாட்சி; அது உங்கள் முத்திரை; நான் பரலோகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் என்பதற்கு அது என் அடையாளம்! பிசாசு என்ன கூறினாலும் கவலையில்லை, நான் பரலோகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் ஏன்? அவர் என்னை முத்தரித்தார்; அவர் எனக்கு அதைக் கொடுத்தார். அவர் தம்முடைய ராஜ்யத்துக்குள் என்னை முத்தரித்தார். நான் மகிமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் காற்று பலமாக அடிக்கட்டும்; சாத்தான் என்னவெண்டுமானாலும் செய்யட்டும்; தேவன் மீட்கப்படும் நாள் வரைக்கும் என்னை முத்தரித்துவிட்டார். ஆமென்! பரிசுத்த ஆவி அதுவாகத்தான் இருக்கிறது. நீங்கள் அதை பெற்றுக்கொள்ளவேண்டும். அதுவில்லாமல் என்னால் ஒன்றும் செய்யமுடியாது. எவ்வளவோ கூறமுடியும், நான் என்ன குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் புரிந்து கொண்டீர்களென்றும் நான் நிச்சயம் நம்புகிறேன். 31.இப்பொழுது நாம் ஒரு நிமிடம் வேதாகமத்தை யோவான் 14-ம் அதிகாரத்துக்கும் திருப்புவோம். நான் வார்த்தையை மிகவும் நேசிக்கிறேன்; அது சத்தியமா யுள்ளது. தேவனுடைய ஆவி, பரிசுத்த ஆவி... பரிசுத்த ஆவி என்பது என்ன? அது உங்களில் வாசமாயிருக்கும் கிறிஸ்துவின் ஆவி . நாம் அதைப் படிக்கும் முன்பு, ஒரு சில வார்த்தைகளை விளக்க விரும்புகிறேன். பரிசுத்த ஆவி என்பது என்ன? அது ஒரு முத்திரை பரிசுத்த ஆவி என்பது என்ன? அது ஒரு உடன்படிக்கை. பரிசுத்த ஆவி என்பது என்ன? அது ஒரு அடையாளம். அப்படி யானால், பரிசுத்த ஆவி என்பது என்ன? அது உங்களில் வாசமாயிருக்கும் கிறிஸ்துவின் ஆவி. ''இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனென் றால் நான் உங்களுடனே வாசம்பண்ணி, உலகத்தில் முடிவு பரியந்தம் உங்களுக்குள்ளே இருப்பேன்“ என்று இயேசு கூறினார். (யோவான் 14:19, 17). 32.அவருடைய சபையில் தேவனுடைய ஆவி, எதற்காக? அவர் எதற்காக அப்படி செய்தார்? இது நாளைய இரவுக்கான பொருள். அவர் எதற்காக அப்படி செய்தார்? அவர் ஏன் பரிசுத்த ஆவி... அவர் எதற்காக உங்களுக்குள் வந்தார்? அவர் எதற்காக எனக்குள் வந்தார்? தேவனுடைய கிரியைகளை தொடர்ந்து நடத்துவதற்காக. ''என் பிதாவுக்குப் பிரியமானவைகளையே நான் எப்பொழுதும் செய்கிறேன். என் சுய சித்தத்தை செய்ய நான் வரவில்லை. என்னை அனுப்பின பிதாவின் சித்தத்தைச் செய்யவே நான் வந்திருக்கிறேன். என்னை அனுப்பின பிதா என்னோடு இருக்கிறார். என் பிதா என்னை அனுப்பினது போல, நானும் உங்களை அனுப்புகிறேன்.'' ஓ, என்னே! பிதா அவரை அனுப்பினார். அவருக்குள் சென்றார். இயேசுவை அனுப்பின பிதா அவருக்குள் வந்து அவர் மூலமாய் கிரியை செய்தார். உங்களை அனுப்பும் இயேசுவும் உங்களோடு சென்று உங்களுக்குள் வாசம்செய்கிறார். இயேசு கிறிஸ்துவுக்குள் வாழ்ந்த அந்த ஆவி, அவர் அந்த விதமாக கிரியைசெய்யவும் நடந்து கொள்ளவும் செய்தபடியால், அது உங்களுக்குள் வாசம் செய்யும் போது, எந்தவிதமான கிரியைகளை நடப்பிக்கும் என்பதைக் குறித்த பொதுவான கருத்து உங்களுக்கு இருக்கும். ஏனெனில் அந்த ஜீவன் மாறவே முடியாது. அது சரீரத்திலிருந்து சரீரத்துக்கு செல்லும். ஆனால் அதன் தன்மையை அது மாற்றிக்கொள்ள முடியாது. ஏனெனில் அது தேவன். 33.இப்பொழுது, யோவான் 14-ம் அதிகாரம். நாம் 10-ம் வசனத்திலிருந்து சிறிது படிப்போம். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்து வருகிறார் (அதை சற்று யோசித்து பாருங்கள்.) நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். அவர் இங்கு என்ன கூறினாரென்று நீங்கள் காண்கிறீர்கள். அல்லவா? அது எப்படி தொடருகிறது என்று கவனியுங்கள். நான் இன்னும் சிறிது தொடர்ந்து படிக்கிறேன். நாம் 20-ம் வசனம் வரைக்கும் படிக்கப்போகின்றோம். நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, (அதை பார்போம், எனக்கு இருந்தது... ஆம்! நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச்செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன். நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன். (இப்பொழுது கவனியுங்கள்....) அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்த சத்திய ஆவியானவரைக் காணாமலும், அறியாமலும் இருக்கிற படியால் அவரைப் பெற்றுக்கொள்ள மாட்டாது; அவர் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். 34.அப்படியானால் அந்த ஆவி என்ன? பரிசுத்த ஆவி என்பது என்ன? அது உங்களுக்குள்ளே இருக்கும் கிறிஸ்து, தேற்றரவாளன்; அதுதான் பரிசுத்த ஆவி. தேற்றரவாளன் வரும்போது, என்னில் தேற்றரவாளன் வாசம் செய்தபோது நான் செய்த கிரியைகளையே நீங்களும் செய்வீர்கள். நான் பிதாவை வேண்டிக் கொள்வேன். அவர் இந்த தேற்றரவாளனை உங்களுக்கு தந்தருளுவார். நீங்கள் தேற்றரவாளனை அறிவீர்கள், உலகமோ அவரை அறியாது (எப்பொழுதுமே அறியாது). ஆனால் அவர் இப்பொழுது உங்களுடனே வாசம்பண்ணி (இயேசு இதை கூறுகிறார், உங்களுக் குள்ளே இருப்பதால் (ஆங்கிலத்தில் “Shall be in you” அதாவது, ''இனிமேல் உங்களுக்குள்ளே இருக்க போவதால் “என்னும் அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்), நீங்கள் அவரை அறிவீர்கள். ...உங்களுக்குள்ளே இருப்பதால். நான் உங்களைத் திக்கற்றவர்களாக (Comfortless) விடேன், உங்களிடத்தில் வருவேன். அதுதான் கிறிஸ்துவாகிய தேற்றரவாளன் (Comforter). அதுதான் பரிசுத்த ஆவி; அது கிறிஸ்து ) . இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள். இப்படியாக நாம் படித்துக்கொண்டே போகலாம். உங்களிடம் இதை அறிவிக்க விரும்புகிறேன். அவர் என்னவாயிருக்கிறார்? அவர் ஒரு முத்திரை; அவர் ஒரு அடையாளம்; அவர் தேற்றரவாளன், அவர் என்னவெல்லாம் இருக்கிறாரென்று பாருங்கள்! ஆபிரகாமின் சந்ததியார் அதை சுதந்தரித்துக் கொள்வார்கள். 35.இப்பொழுது, தேற்றரவாளன் வேறென்னவாக இருக்கிறாரென்று நாம் பார்ப்போம். நாம் 1 யோவான்16:7-க்கு செல்வோம். அவர் பரிந்து பேசுகிறவராகவும் (Advocate) இருக்கிறாரா என்று நாம் பார்ப்போம். பரிந்து பேசும் வழக்கறிஞர் என்றால் என்னவென்று உங்களக்குத் தெரியுமா? நமக்காக பரிந்து பேசும் ஒருவர் இருக்கிறார். அது நமக்குத் தெரியும். 1யோவான் 16-ம் அதிகாரம்... ஓ, ஒரு நிமிடம் பொறுங்கள்; நான் வருந்துகிறேன். அது பரி. யோவான் 16:7. நான் வருந்துகிறேன்; நான் தவறாகக் கூறினதால் நிச்சயம் வருந்துகிறேன். அதை குறிப்பில் தவறாக படித்துவிட்டேன். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும். நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; 'நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக் குறித்தும். நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடி யினாலே நீதியைக் குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக் குறித்தும், கண்டித்து உணர்த்துவார். 36.என்னே! இப்பொழுது, பரிந்து பேசுகிறவர் என்பது 1 யோவான் 2:12-ல் காணப்படுகிறது. இப்பொழுது, 1யோவான் 2:12ஐ ஒரு நிமிடம் படிப்போம். உங்கள் மன்னிப்பைக் கோருகிறேன். அது 1 யோவான் 2:1-2. அதை இங்கு குறித்து வைத்திருக்கிறேன். என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார் (பரிந்து பேசுகிறவர் யார்? நீதிபரராகிய இயேசுகிறிஸ்து). நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வ லோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார். பரிசுத்த ஆவி என்பது என்ன? பரிந்து பேசுகிறவர், பரிந்து பேசுகிறவர் யார்? அது என்ன செய்கிறது? எது பரிந்து பேசுகிறவராகச் செய்கிறது? அதற்கு இரக்கம் உள்ளது. அது உங்கள் ஸ்தானத்தில் நிற்கிறது. நீங்கள் செய்யக்கூடாத காரியங்களை அது செய்கிறது. அது உங்கள் பாவங்களை நிவிர்த்தி செய்யும் கிருபாதார பலி. அது உங்கள் நீதி; அது உங்களுக்கு சுகமளிக்கிறது; அது உங்கள் ஜீவன்; அது உங்கள் உயிர்த்தெழுதல். தேவன் உங்களுக்கு என்னவெல்லாம் வைத்திருக் கிறாரோ, அது அனைத்துமாக அது உள்ளது. அவர் பரிந்துபேசுகிறவர். 37.நாம் இன்னும் அதிக விவரணங்களுக்குச் சென்று அதை தெளிவுபடுத்திக் காண்பிக்க முடியும் - அது எவ்வாறு நமது அறியாமைக்காக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறது என்றெல்லாம். சில சமயங்களில், நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்ட பிறகு, நமது அறியாமையினால் ஏதோ ஒன்றுக்குள் தடுமாறி விழுந்துவிடுகிறோம். அப்பொழுது பரிசுத்த ஆவி நமக்காக பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். அவர் நமக்காக பரிந்து பேசுகிறவர். அவர் அங்கு நின்று கொண்டிருக்கிறார். அவர் நமது வழக்கறிஞர். அவர் அங்கு நின்றுகொண்டு, நமக்காக கெஞ்சுகிறார். நாம் நமக்காக கெஞ்சுவதில்லை, நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவி நமக்காக கெஞ்சி வேண்டுதல் செய்கிறார். சில சமயங்களில் பரிசுத்த ஆவியானவர் வாக்குக்கடங்காத பெருமூச்சுடன் நமக்காக வேண்டுதல் செய்கிறார். அதுதான் பரிசுத்த ஆவி. நான் ஏதாகிலும் ஒன்றுக்குள் நடக்கும்போது, சிறு குழந்தையை போல் நடக்கிறேன். நீங்களும் சிறு பிள்ளைகளைப் போல் நடக்கிறீர்கள். நாம் சத்துருக்கள் நிறைந்ததும், பாவம் நிறைந்ததும், கண்ணி நிறைந்ததும், மற்றெல்லாம் நிறைந்ததுமான அந்தகார உலகத்தில் நடந்து கொண்டிருக்கிறோம். நீங்கள், “ஓ, கிறிஸ்தவ ஜீவியத்தை ஏற்றுக்கொள்ள எனக்கு பயமாயுள்ளது. இதை செய்ய எனக்கு பயமாயுள்ளது, அதை செய்ய எனக்கு பயமாயுள்ளது'' என்கிறீர்கள். பயப்படாதிருங்கள். நமக்காக பரிந்து பேசும் ஒருவர் இருக்கிறார். ஆமென்! ஓ, அவர் நமது சார்பில் இருக்கிறார், அவர் நமக்குள் இருக்கிறார், அவர் நமக்காக வேண்டுதல் செய்கிறார். பரிசுத்த ஆவியானவர் எல்லா சமயங்களிலும் தொடர்ந்து நமக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவர் நமக்காக பரிந்து பேசுகிறவர் (ஓ, அதற்காக நாம் எவ்வளவாக தேவனுக்கு நன்றி செலுத்து கிறோம்). முத்திரை, அடையாளம், ஜீவனுள்ள ஆவி, பரலோகத்தின் தேவன், தேற்றரவாளன், ஜீவன். பரிந்து பேசுகிறவர். அவர் என்னவாயிருக்கிறார்? ஓ, என்னே !அதைக் குறித்து நாம் மணிக்கணக்காக பேசிக் கொண்டே போகலாம். இப்பொழுது ஒரு நிமிடம் மாற்றப்போகிறோம். 38.இப்பொழுது, நாம் கேட்கப்போகிறோம்... கடைசி நாளில் நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ள ஒன்று. இந்த பரிந்து பேசுகிறவர், முத்திரை, வாக்குத்தத்தம், இன்றிரவு அவரைக்குறித்து நாம் பேசிக்கொண்டிருந்த எல்லாமே பல்லாயிரம் மடங்கு அதிகமாக - கடைசி நாளில் நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் அவர்கள் அதைப் பெற்றிருக்கவில்லை; அது வரப்போகின்றது என்பதை அவர்கள் விசுவாசித்து, அதற்கு அடையாளமாக தங்கள் மாமிசத்தில் அவர்கள் ஒரு முத்திரையைப் பெற்றிருந்தனர். அவர்கள் நியாயப்பிரமாணத்தின் நிழலில் நடந்து, மாமிசத்தில் விருத்தசேதனம் பண்ணப்பட்டிருந்தனர். இன்றைக்கோ நாம் நியாயப்பிரமாணத்தின் நிழலில் நடப்பதில்லை; நாம் உயிர்த்தெழுதலின் வல்லமையில் நடக்கிறோம். நாம் ஆவியின் வல்லமையில் நடக்கிறோம். அந்த ஆவியே நமது உண்மையான முத்திரை, நமது உண்மையான பரிந்து பேசுகிறவர், நமது உண்மையான தேற்றரவாளன், நாம் உயர்விலிருந்து பிறந்தவர்கள், வினோதமான ஜனங்கள், விசித்திரமாக நடந்துகொள்பவர்கள், தேவன் கூறின வார்த்தையை விசுவாசித்து, மற்றெல்லாவற்றையும் தவறென்று அழைப்பவர்கள் என்பதற்கு அது நமது உண்மையான அடையாளம். அது ... ஓ, என்னே ! அது தான் பரிசுத்த ஆவி. 39.உங்களுக்கு அது வேண்டுமா? அதைப் பெற்றுக்கொள்ள நீங்கள் ஆவல் கொள்வீர்கள் அல்லவா? அது வாக்களிக்கப்பட்டுள்ளதா என்று நாம் காண்போம். நாம் ஏசாயாவின் புத்தகத்துக்கு செல்வோம். நாம் 28-ம் அதிகாரத்துக்கு திருப்புவோம். நாம் 8-ம் வசனத்தை பார்ப்போம். அது வருவதற்கு 712. ஆண்டுகளுக்கு முன்பு ஏசாயா என்ன உரைத்தான் என்று காண்போம். நாம் முதலிலிருந்து தொடங்கி, இதைக் குறித்து அநேக காரியங்களைக் கூறலாம். ஆனால் நாம் இங்கு துவங்கி அது சபைக்கு வாக்களிக்கப்பட்டுள்ளதா என்று காண்போம். அது எப்பொழுது வரவேண்டுமென்று கூறப்பட்டுள்ளது? அசுத்தம் நிறைந்துள்ள கடைசி நாட்களில். அந்த வார்த்தை பன்மையில் நாட்கள் என்றுள்ளது, என்பதை ஞாபகம் கொள்ளுங்கள் - கடைசி இரண்டு நாட்கள், கடைசி இரண்டாயிரம் ஆண்டுகள், இப்பொழுது 8-ம் வசனம், போஜனபீடங்களெல்லாம்... அசுத்தத்தினாலே நிறைந்திருக்கிறது சுத்தமான இடமில்லை. இன்று சுற்று முற்றும் தேடி சுத்தமான இடத்தைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். இது நிறைவேறும் அந்த நாளில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்பதை சுற்றிலும்நோக்கி கண்டுகொள்ளுங்கள். போஜனபீடங்களெல்லாம்... அவர்கள் கர்த்தருடைய இராப்போஜனத்துக்கு செல்கின்றனர். அவர்கள் முதலாவதாக, வாணிபரீதியில், அவர்கள் ஒரு பழையமெல்லிய ரொட்டித் துண்டையோ, அல்லது ஒரு சோடா பிஸ்கோத்தையோ (Soda racker) எடுத்துக்கொண்டு அதை உடைத்து இராப்போஜனம் பரிமாறுகின்றனர் - அது பரிசுத்த ஆவி நிறைந்த ஒருவரின் கரங்களால். புளிப்பில்லாத அப்பமாக செய்யப்படவேண்டுமென்று இருக்கும்போது, அது கிறிஸ்துவைக் குறிக்கிறது. அவர் அசுத்தமானவர் அல்ல. வேறொரு காரியம், அவர்கள் அதை மது அருந்துபவர், பொய் சொல்பவர், களவாடுபவர், புகைப்பிடிப்பவர், புகையிலை மெல்பவர் போன்ற எவருக்குமே கொடுக்கின்றனர் இப்படிப்பட்டவர்கள் அவர்களுடைய ஸ்தாபனங்களில் அங்கத்தினராயிருக்க நேரிட்டால், அது தூரமாயிருப்பதாக நாம் இங்கு புசித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு மனிதன் அதை உட்கொள்ள நேரிட்டால், கர்த்தருடைய சரீரம் இன்னதென்றும் அவன் நிதானித்து அறியாததனால், தனக்குத்தானே ஆக்கினையை வருவித்துக் கொள்கிறான். நீங்கள் அதற்கேற்ற ஜீவியம் செய்யாவிட்டால், அதில் பங்கு கொள்ளாதிருங்கள். நீங்கள் பங்குகொள்ளாவிட்டால், உங்கள் மனசாட்சி குற்றமுள்ளது என்பதை அது காண்பிக்கிறது, அதை புசிக்காதவனுக்கு என்னிடத்தில் பங்கில்லை'' என்று இயேசு கூறினார். 40.ஆனால் கர்த்தருடைய போஜனபீடங்களெல்லாம் அசுத்தத்தினால் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை. கவனியுங்கள், அது இன்றைய நாளை சித்தரிக்கவில்லையாவென்று. அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு , உபதேசத்தை உணர்த்துவார்? யார் அறிவை புரிந்து கொள்வார்கள்? அவர் யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? 'நல்லது, கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நான் பிரஸ்பிடேரியன்'' நான் மெதோடிஸ்டு. ' ''நான் பெந்தேகொஸ்தேயினன்.'' ''நான் நசரீன்.'' ''நான் யாத்திரீக பரிசுத்தன்.“ அது கர்த்தருக்கு ஒரு வித்தியாசத்தையும் உண்டுபண்ணுவதில்லை - மற்றொரு போஜனபீடம். 41.“நான் யாருக்கு உபதேசத்தை உணர்த்துவேன்?'' எப்படிப்பட்ட உபதேசம்? மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு. பிரஸ்பிடேரியன். பெந்தெகோஸ்தே உபதேசம் போன்றவையா? இல்லை. வேதாகம உபதேசம். ”நான் யாருக்கு உபதேசத்தை உணர்த்துவேன்?'' அதை பெற்றுக்கொண்டதாக எப்படி அறிவீர்கள்? அதைக் குறித்து நாம் வெள்ளி இரவன்று பார்ப்போம். பாருங்கள்? “நான் யாருக்கு உபதேசத்தை உணர்த்துவேன்?'' இப்பொழுது கவனியுங்கள். பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே . சிறுகுழந்தைகள், 'நல்லது, நான் சபைக்குச் செல்கிறேன். என் தாய் அந்த சபையைச் சேர்ந்திருந்தார்கள்'' என்கின்றனர். அருமை சகோதரனே, அதற்கு விரோதமாக எனக்கு ஒன்றுமில்லை. (இது ஒலி நாடாவில் பதிவு செய்யப்படுகிறதென்று எனக்குத் தெரியும்). தாய் சேர்ந்திருந்த சபையில் சேர்ந்திருப்பது சரி. ஆனால் கவனி! தாய் ஒரு வெளிச்சத்தில் நடந்தார்கள், நீ வேறொரு வெளிச்சத்தில் நடந்து கொண்டிருக்கிறாய். லூத்தர் ஒரு வெளிச்சத்தில் நடந்தார்; வெஸ்லி வேறொரு வெளிச்சத்தில் நடந்தார். வெஸ்லி ஒரு வெளிச்சத்தில் நடந்தார்; பெந்தெகொஸ்தே சபை. வேறொரு வெளிச்சத்தில் நடந்தது. நாமோ அதைக் காட்டிலும் உயரமாக இன்று நடந்து கொண்டிருக்கிறோம். இன்னுமொரு சந்ததி இருக்குமானால், அது நம்மை கடந்து செல்லும். 42.ஆரம்ப நாட்களில் வழி அகலமாயிருந்தபோது, லூத்தர் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல் என்பதைக் குறித்து போதித்தார். அது மக்களை கத்தோலிக்க மார்க்கத்திலிருந்து பிராடெஸ்டெண்டு மார்க்கத்துக்கு கொண்டுவந்து, வார்த்தையின் பேரில் ஐக்கியங்கொள்ளச் செய்வதற்கே. விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல் என்பது மிகவும் அகலமான ஒரு ஆதிக்கம்; அவர்கள் அதிலிருந்து நகர்ந்து செல்லவே யில்லை. பின்பு ஜான் வெஸ்லி என்று அழைக்கப்பட்டவரின் மூலம் மற்றொரு எழுப்புதல் உண்டானது. அது அவர்களை அதிலிருந்து அசைத்து சபையை பரிசுத்தமாக்கப்படுதல் என்பதற்கு கொண்டு வந்தது - தேவனுடைய வார்த்தையினால் பரிசுத்தமாக்கப்பட்டு, நல்ல, சுத்தமான, பரிசுத்த வாழ்க்கை நடத்துதல். அது இருதயத்துக்கு மகிழ்ச்சியளித்தது. அது லூத்தரன் உபதேசத்தின் பெரும்பாலானதை அகற்றினது. 43.பின்பு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பதுடன் பெந்தெகொஸ்தேயினர் வந்து, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அதை குறுகலாக்கினர். அது உண்மை. இப்பொழுது அதுவும் அசைக்கப்படு கின்றது. வரங்கள் புதுப்பிக்கப்படுதல். தேவனுடைய ஆவி இப்பொழுது அடையாளங்கள், அற்புதங்கள் இவைகளின் முழுமையில் சபையில் தோன்றி, பெந்தெகொஸ்தேயினரை அசைத்து விட்டது. அது என்ன? நாம் கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு மிக அருகாமையில் இருக்கிறபடியால் அவருக்குள்ளிருந்த அதே ஆவி இப்பொழுது சபையில் கிரியை செய்து, அவர் உலகில் இருந்த நாட்களில் செய்த அதே கிரியை களை செய்து கொண்டிருக்கிறது. அப்போஸ்தலர்களின் காலம் தொடங்கி இதுவரைக்கும் உள்ள காலத்தில் வேறெங்குமே இப்படி நடந்ததில்லை. ஏன்? பாருங்கள்? அது அகலமாயிருந்து, குறுகி, குறுகி, குறுகிக்கொண்டே வருகிறது. அது என்ன? உங்கள் கை நிழலுக்கு வருவதைப் போல்- 'நெகடிவ்', 'நெகடிவ்', 'நெகடிவ்'. நல்லது, அது என்ன? அது ஒரு பிரதிபலிப்பு. லூத்தர் யார்? கிறிஸ்துவின் பிரதிபலிப்பு. வெஸ்லி யார்? கிறிஸ்துவின் பிரதிபலிப்பு. கவனியுங்கள்! பில்லி சண்டேயின் (Billy Sunday) காலம் இப்பொழுது தான் முடிவுபெற்றது. அன்றொரு நாள் வயோதிப டாக்டர். விட்னி (அவர் இந்த பிரசங்க பீடத்திலிருந்து பிரசங்கம் செய்திருக்கிறார்), பழைய வகுப்பைச் சார்ந்தவரில் கடைசியானவர், ஏறக்குறைய தொண்ணூறு வயதில் காலமானார். பில்லி சண்டே தன் நாட்களில் இருந்த பெயர்க் கிறிஸ்தவ சபைகளுக்கு எழுப்புதல் பிரசங்கியாயிருந்தார். அவர் எதையும் மறைத்து பேசவில்லை. அவர் அங்கு நின்று கொண்டு, ''மெதோடிஸ்டுகள் அனைவருமாகிய நீங்கள், பிரசங்கிமார்கள் உட்பட, உங்கள் மாய்மாலத்தை விட்டுவிடுங்கள். பிரஸ்பிடேரியன்களே ...'' என்று கூச்சலிட்டார். அவர் எதையும் மறைத்து பேசவில்லை. அவர் அவருடைய நாளின் பில்லிகிரகமாக விளங்கினார். 44.கவனியுங்கள், பெயர்க் கிறிஸ்தவ சபைகள் தங்கள் எழுப்புதலைப் பெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில், என்ன நடந்து கொண்டிருந்தது? முழு சுவிசேஷமும் எழுப்புதலைப் பெற்றுக்கொண்டிருந்தது, அப்பொழுது பாஸ்வர்த் சகோதரர்கள் ஸ்மித் விக்கில்ஸ்வர்த், டாக்டர். ப்ரைஸ், ஏய்மி மாக்பெர்ஸன் போன்றவர்கள் தோன்றினர். கவனியுங்கள்! ஸ்மித் விக்கில்ஸ்வர்த் ஒரு இரவு மரித்துப் போனார் - அடுத்த நாள் காலை டாக்டர் ப்ரைஸ் மரித்துப் போனார். இருபத்து நான்கு மணி நேரத்துக்குள். நான் சுவிசேஷப் பணிக்காக அப்பொழுது வெளிநாடு சென்றிருந்தேன். இப்பொழுது என் முடிவும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதை கவனியுங்கள். நீங்கள், பில்லிகிரகாமைக் குறித்து இப்பொழுது அதிகம் கேள்விப்படுவதில்லை, ஓரல் ராபர்ட்ஸைக் குறித்து நீங்கள் அதிகம் கேள்விப்படுவதில்லை, என் கூட்டங்களும் நிழலிட்டு வருவதைக் காண்கிறேன். அதன் அர்த்தம் என்ன? நாம் முடிவில் இருக்கிறோம், வேறொரு காலம். பில்லி சண்டேயும் மற்றவர்களும் எப்பொழுது வந்தார்கள்? மகத்தான மூடி எழுப்புதலுக்குப் பிறகு. மூடி எப்பொழுது வந்தார்? நாக்ஸ் எழுப்புதலுக்குப் பிறகு, நாக்ஸ் எப்பொழுது வந்தார்? ஃபின்னியின் எழுப்புதலுக்குப் பிறகு. ஃபின்னி கால்வினுக்குப் பிறகு, கால்வின் வெஸ்லிக்குப் பிறகு, வெஸ்லி லூத்தருக்குப் பிறகு. இவ்வாறு காலங்கள்தோறும் அவர்கள் வந்தனர். ஒரு எழுப்புதல் முடிந்தவுடனே தேவன் வேறொருவரை எழுப்பி அதிக வெளிச்சம் தருகிறார் - இவ்வாறு நகர்ந்து கொண்டே செல்கிறார். 45.இப்பொழுது நாம் இந்த காலத்தின் முடிவில் இருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் தன் சந்திப்பின் (Tunction) முடிவில், கிறிஸ்துவின் வருகையை எதிர் நோக்கினான். ஆனால் அவர்கள் எதிர்நோக்குவதற்கு நிறைய சம்பவங்கள் இருந்தன யூதர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்புதல், வானத்தில் பறக்கும் தட்டுகள் போன்ற இன்று நாம் காணும் சம்பவங்கள். நாம் முடிவில் இருக்கிறோம். நாம் இங்கு வந்திருக்கிறோம்! சபை வல்லமையைப் பெற்று, கிறிஸ்து செய்த அதே கிரியைகளை சபையில் செய்யும் என்று அவர்கள் அறிந்திருந்தனர். ஏனெனில் நிழல் பெரிதாகிக் கொண்டே வந்து அதிகம் பிரதிபலிக்கும்போது... ஒரு நிழலை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் நிழலிலிருந்து வெகுதூரம் செல்லும்போது, நிழலின் பிரதிபலிப்பு மிகவும் குறைந்து விடுகிறது. சிறிது கழித்து நிழல் அருகாமையில் வரும்போது மரத்துக்கு அருகா மையில் வரும்போது நிழலும் அதுவும் ஒன்றே. 46.இப்பொழுது, தேவனுடைய ஆவி லூத்தரின் காலத்தில் நீதிமானாக்கப்படுதலின் கீழிலும், வெஸ்லியின் காலத்தில் பரிசுத்தமாக்கப்படுதலின் கீழிலும், பெந்தெகொஸ்தேயினர் காலத்தில் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் கீழிலும் கிரியை செய்தது; ஆனால் கடைசி நாளில் அது, கிறிஸ்துவுக்குள் அது இருந்தபோது செய்த அதே கிரியைகளையே இங்கு செய்து வருகிறது. அது என்ன? சபையும் கிறிஸ்துவும் ஒன்றாகி விட்டது. அவர்கள் அதை ஒன்றாக இணைக்கும் போது - கடைசி இணைப்பு- சபையானது சத்தமிட்டுக் கொண்டே வானத்தின் வழியாக செல்லும். வெஸ்லி உயிரோடெழுவார், லூத்தர் உயிரோடெழுவார், முன்காலங்களில் கிறிஸ்துவுக்குள் மரித்த மற்றவர் அனைவருமே உயிரோடெழுவர். முந்தினோர் பிந்தினோராவர்; பிந்தினோர் முந்தினோராவர். உயிர்த்தெழுதல் உண்டாகும். நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். கவனியுங்கள்! பரிசுத்த ஆவி அதைத்தான் செய்கிறார்: நீதிமானாக்கப்படுதலினால். பரிசுத்தஆவி (பாருங்கள்?), அதன் நிழலின் மெல்லிய பாகமே; பரிசுத்தமாக்கப்படுத்தலினால் பரிசுத்த ஆவி. அதைக்காட்டிலும் சற்று ஆழமான நிழல்; பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் பரிசுத்த ஆவி, இன்னும் ஆழமான நிழல்; இப்பொழுது புதுப்பிக்கப்படுதலினால் அதே நபர் இங்குள்ளதனால் பரிசுத்த ஆவி. அவர் துவக்கத்தில் செய்தது போன்று அதே அடையாளங்களையும் அற்புதங்களையும் இப்பொழுது செய்து வருகிறார். வ்யூ மகிமை! நீங்கள் எப்படியாயினும் என்னை உருளும் பரிசுத்தர் என்றழைக்கப்போகின்றீர்கள். அப்படி அழைக்க இப்பொழுதே துவங்கி விடுங்கள். 47.சகோதரரே, கவனியுங்கள்! இதை கவனியுங்கள்! ''போஜன பீடங்களெல்லாம் வாந்தியினால் நிறைந் திருக்கிறது; சுத்தமான இடமில்லை. அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால் மறந்தவர்களுக்கும் முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே.''பிரஸ்பிடேரியன் குழந்தைகள், மெலோடிஸ்டு குழந்தைகள், பெந்தெகொஸ்தே குழந்தைகள், லூத்தரன் குழந்தைகள், நசரீன் குழந்தைகள் போன்ற குழந்தைகளுக்கு அல்ல. மார்பகத்தினின்று அகன்று பலமுள்ள ஆகாரத்தை உண்ண சித்தம் கொள்ளும் ஒருவரையே அவர் விரும்புகிறார். இதோ இந்த வசனத்தில் வருகிறது! கற்பனையின் மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே, கொஞ்சமுமாய் என்கிறார்கள், பரியாச உதடுகளினாலும் (ஆங்கிலத்தில் “stammering lips” அதாவது 'திக்கு உதடுகளினாலும்“ என்னும் அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கி யோன்) அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்க மாட்டோம் என்கிறார்கள். (ஏசா.28:10-12) பெந்தெகொஸ்தே நாளன்று அதற்கு 712 ஆண்டுகளுக்கு முன்பு உரைக்கப்பட்ட தீர்க்க தரிசனத்தின் நிறைவேறுதலாக, அதேபோன்று அது வரவில்லையா? பெந்தெகொஸ்தே நாளன்று அதே விதமாக அது வந்தது. 48.ஒருவர் கூறுகிறார், ஓய்வு நாளை ஆசரித்தல் ... நான் எந்த ஒரு சபையையோ மார்க்கத்தையோ குறை கூறவில்லை. “ஓய்வு நாள் கர்த்தருடைய ஓய்வு நாள், ஓய்வுபெறும் இளைப்பாறுதலின் நாள்'' என்று மாத்திரமே கூறுகின்றேன், இதோ அந்த ஓய்வு நாள். இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத் தக்க இளைப்பாறுதல்” என்று அவர் கூறுகிறார் அதுதான். ஆமென்! அது கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமுமாய் இருக்கும்! இதோ அந்த இளைப்பாறுதல். பரிசுத்த ஆவி என்பது என்ன? இளைப்பாறுதல். 'வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.'' மத். 11:28 அவர் என்னவாயிருக்கிறார்? உங்களுக்குள் வரும் அவர் உங்களுக்கு சமாதானத்தை தருகிறார், அவர் உங்கள் அடையாளமாகவும் தேற்றரவாளனாகவும் இருக்கிறார். நீங்கள் தேற்றப்பட்டு, இளைப்பாறுதலை பெற்று, முத்தரிக்கப்பட்டிருக்கின்றீர்கள்! அது ஒரு அடையாளம். உங்களுக்கு ஏதோ ஒன்று நடந்துள்ளது என்று உலகம் அறிந்துகொள்கிறது. அது என்ன? அது தேற்றரவாளன். அது என்ன? அது முத்திரை. நீங்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள்... அது உங்கள் பரிந்து பேசுகிறவர். உங்களுக்கு ஏதோ ஒன்று நடந்து விட்டால், உடனடியாக உங்களுக்காக பரிந்து பேசி (பாருங்கள்?), வேண்டுதல் செய்ய அங்கு ஒன்றுள்ளது. அதுதான் சபையில் ஜீவிக்கும் தேவனுடைய ஆவி. அது வரும்போது என்னவாயிருக்குமென்று பிழையின்றி தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது; அது என்றென்றைக்குமுள்ள நித்திய இளைப்பாறுதலாயிருக்கும். 49.தேவன் உலகத்தை படைத்து (எபி. 4-ம் அதிகாரம்) தேவன் உலகத்தை படைத்து, ஏழாம் நாளில் ஓய்திருந்தார். அது உண்மை! எட்டாம் நாள் மறுபடியு மாக வருகிறது... ஏழாம் நாள் ஆசரிப்பை அவர் ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் ஒரு உடன்படிக்கையாக கொடுத்தார். அது உண்மை . அவர்கள் போய் ஒரு நாள் இளைப்பாறி, மீண்டும் வாரத்தின் முதலாம் நாளில் எல்லாவற்றையும் புதிதாக துவங்குகின்றனர். மறு படியும் துவங்குகின்றனர். அந்த இளைப்பாறுதலைக் குறித்தல்ல தேவன் குறிப்பிட்டது தேவன் ஆறு நாட்களில் உலகத்தை சிருஷ்டித்து விட்டு, இளைப்பாறச் சென்றபோது, அப்பொழுது முதல் அவர் இளைப்பாறினார். அது உண்மை. அத்துடன் அது முடிவு பெற்றுவிட்டது. அவர் எட்டாம் நாளிலே வந்து அதை மறுபடியும் துவங்கவில்லை; அது ஒரு நிழலாக மாத்திரம் அமைந்துள்ளது. இப்பொழுது சூரியனுக்கும் சந்திரனுக்குமிடையே யுள்ள ஒன்றினைப் போல் அது முன்னடையாளமாக அமைந்துள்ளது. சூரியன் எழும்போது, நமக்கு சந்திரன் அவசியமில்லை. இதை கவனியுங்கள்! (ஓ, வெளிப் படுத்தல் 12-ம் அதிகாரத்தில், சந்திரனைத் தன் பாதங்களின் கீழும், சூரியனைத் தன் தலையிலும் கொண்டுள்ள ஸ்திரீ). நாம் முதல் பக்கத்திலிருந்து கடைசிபக்கம் வரைக்கும் வேதாகமத்தை ஆராய்ந்து உங்களுக்கு காண்பிக்க முடியும் பாருங்கள்? 50.அது என்ன? யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு இளைப்பாறுதலின் நாளைக் குறித்து சொல்லியிருக்க மாட்டாரே என்று வேதம் எபிரேயர் 4 -ம் அதிகாரத்தில் உரைக்கிறது (எபி.4:8). அவர் எந்த நாளை இளைப்பாறுதலின் நாளாக குறிப்பிடுகிறார்? வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்: நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். (மத்தேயு 11-ம் அதிகாரம் 28-ம் வசனம்). கவனியுங்கள்! நாம் அவரிடத்திற்கு வரும்போது “ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலின் பிரவேசித்தவன்; தேவன் உலகத்தை படைத்து முடித்து தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்து அதற்கு மறுபடியும் திரும்பாதது போல தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்'' என்று எபிரேயர் 4-ம் அதிகாரம் உரைக்கிறது. (எபி.4:10). எவ்வளவு நாட்கள்? நீங்கள் எவ்வளவு நாட்களாக பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கப்பட்டிருக்கிறீர்கள்? நீங்கள் மீட்கப்படும் நாள் வரைக்கும். அது தான் அந்த இளைப்பாறுதல், தேற்றுதல், பரிந்துபேசும்வர், முத்திரை, மீட்பவர். ஓ, நான் ஒருவிதமாக உணர்ச்சி வசப்படுகிறேன்! நான் ஒருவிதமாக ஆசீர்வாதம் பெறுகிறேன். ஓ!. 51.''சகோ.பிரான்ஹாமே, அது எங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ளதா? அது வேதரீதியாக நிரூபிக் கப்பட்டுள்ளதா?'' சரி, நாம் யோவேல் தீர்க்கதரிசியின் புத்தகத்துக்கு சென்று, அவன் இதைக் குறித்து என்ன கூறினானென்று காண்போம். தேவனுடைய ஆசீர் வதிக்கப்பட்ட வார்த்தைகாக நான் எவ்வளவாக நன்றி யுள்ளவனாயிருக்கிறேன்! தேவனுடைய வார்த்தை நமக்கு கிடைக்கமாலிருந்தால், நாம் எங்கு நின்றி ருப்போம் என்று நமக்கு தெரியாது. சரி இப்பொழுது நாம் யோவேல் புத்தகத்துக்கு வந்திருக்கிறோம். நாம் யோவேல் 2-ம் அதிகாரத்துக்கு சென்று, 28 - ம் வசனத்திலிருந்து துவங்கப்போகின்றோம் யோவேல் 2:28. கிறிஸ்து இவ்வுலகில் தோன்றுவதற்கு எண்ணூறு ஆண்டுகட்கு முன்பே, தீர்க்கதரிசி ஆவியில் இதைக் கூறுகிறான். கவனியுங்கள்: அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கரிசனஞ் சொல்லு வார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள், ஊழியக்காரர் மேலும் ஊழியக்காரிகள் மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன். வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகை ஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன். கர்த்தருடைய பெரிதும் பயங்கரமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும் சந்திரன் இரத்தமாகவும் மாறும். அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்... (யோவேல்2:28-32) 52.ஆ! ஓ! என்ன? யோவேல்... அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தில் பேதுரு இதே வசனங்களை எடுத்துக் கொண்டு, “எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் (இந்த முத்தரிக்கப்பட்ட, தேற்றப்பட்ட, வினோதமான, எல்லோராலும் கவனிக்கப்பட்ட ஜனங்கள்) வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக் கிறதே. கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டப் படியே இது நடந்தேறுகிறது'' என்றான் (அப். 2:14-17). அது என்ன? பரிசுத்த ஆவி என்பது என்ன? சரி, இப்பொழுது நாம் மறுபடியும் கவனிப்போம். விசுவாசிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குத்தத்தம், அதுதான் இது. இந்த பரிசுத்த ஆவி என்னவென்று இன்னும் ஒரு நிமிடத்தில் பார்ப்போம். அது யாருக்கு வாக்களிக்கப்பட்டது? விசுவாசிகளுக்கு. இப்பொழுது நாம் லூக்கா 24 - ம் அதிகாரத்துக்கு சென்று, இயேசு இவ்வுலகை விட்டுசெல்லும் முன்பு கூறின கடைசி வார்த்தைகளைப் பார்ப்போம். குறித்துக்கொள்பவர்கள் இதை குறித்துக்கொண்டு, நாளை உங்களுக்கு நேரமிருக்கும்போது, இதை நன்றாக படியுங்கள். இப்பொழுது லூக்கா 24:49. இயேசு கூறினதை கூர்ந்து கவனியுங்கள். முடிவில் அவர் மகிமைக்கு ஏறிச்சென்ற போது, அவர் தமது சீஷர்களிடம் கூறின வார்த்தைகள் இவைகளே. என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை... என்ன வாக்குத்தத்தம்? முத்திரை, அடையாளம், தேற்றரவாளன், ஆயிரக்கணக்கான முறை நான் கூறின இவை ... என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை, இதோ நான் உங்களுக்கு அனுப்புகிறேன். (என்ன வாக்குத்தத்தம்? வருமென்று ஏசாயா முன்னுரைத்தது. பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடேபேசுவேன். நான் உங்களுக்கு இளைப்பாறுதலை அனுப்புவேன். யோவேல் முன்னுரைத்ததை நான் உங்களுக்கு அனுப்புவேன். அதாவது கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார்' என்பதை. ஓ, நான் உங்களுக்கு அனுப்பி, எருசலேமில் துவங்கி எல்லா ஜாதிகளையும்... நான் ஆபிரகாமின் சந்ததியாரை இந்த உடன்படிக்கையின் கீழ் கொண்டு வருவேன். அவர்கள் ஒவ்வொருவரையும் நான் முத்திரைபோடுவேன். என் ஆவியை ஊற்றுவேன்'')... என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்பு கிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் (Power) தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள்... (அதாவது, ''காத்திருங்கள்''). 53.அப்படியானால், பரிசுத்த ஆவி என்பது என்ன? உன்னதத்திலிருந்து வரும் பெலன் பேராயரிடத்தி லிருந்து வரும் பெலன் அல்ல, சபையிலிருந்து வரும் பெலன் அல்ல, ஆனால் உன்னதத்திலிருந்து வரும் பெலன் அல்லது வல்லமை. அந்த வல்லமை எப்படி வந்தது? சபையை சேர்ந்து கொண்டதன் மூலமா? அது சரியென்று கூறும் உங்களுக்கு சவால் விடுகிறேன். ஒரு சபையைச் சேர்ந்துக்கொண்டு, போதகருடன் கைகுலுக்குவதன் மூலமா? இல்லை, ஐயா! கத்தோலிக்கராகிய நீங்கள் உங்கள் நாவை வெளியே நீட்டி முதலாம் இராப்போஜனத்தை பெற்றுக்கொள்வதன் மூலமா? இல்லை, ஐயா! உன்னதத்திலிருந்து வரும் அந்த பெலன் எப்படி வந்தது? நாம் தொடர்ந்து வேதாகமத்திலிருந்து படிப்போம். நாம் அப்போஸ்தலர் 1:8க்கு செல்வோம். அவர்கள் ஒன்று கூடியிருந்தபோது, இயேசுவைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யூதாஸின் ஸ்தானத்தில் வேறொருவனை நியமித்திருந்தனர். அப்போஸ் தலர் 1:8: பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது (அதாவது வந்த பின்பு ) நீங்கள் பெலனடைந்து (அதாவது, வல்லமையைப் பெற்றுக்கொண்டும்... என்ன? நீங்கள் பிரான்ஹாம் கூடாரத்தின் அங்கத்தி னராவதன் மூலமா? இல்லை! நீங்கள் மொதோடிஸ்டு சபை, கத்தோலிக்க சபை, பிரஸ்பிடேரியன் சபை ஆகியவைகளின் அங்கத்தினராவதன் மூலமா? அப்படியொன்றும் வேதத்தில் எழுதப்படவில்லை. அது மனிதனால் உண்டாக்கப்பட்ட போதகம். ''நீங்கள் போதகரான பின்பு பெலனடைகிறீர்களா?'' இல்லை, ஐயா! “நீங்கள் வேத சாஸ்திரத்தில் பட்டங்கள் பெற்றபின்பு பெலனடைகிறீர்களா? இல்லை, ஐயா! ''நீங்கள் தண்ணீர் ஞானஸ்நானம் பெற்ற பின்பு பெலனடைகிறீர்களா?'' இல்லை ஐயா! ''நீங்கள் முதலாம் இராப்போஜனத்தில் பங்கு கொண்டபின்பு பெலனடைகிறீர்களா; ''இல்லை, ஐயா! இவையாவும் மனிதனால் உண்டாக்கப்பட்டவை. 54.வேதம் என்ன கூறுகிறதென்று, இயேசு என்ன கூறினாரென்று கவனியுங்கள். ...பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து ... (பரிசுத்த ஆவி என்பது என்ன? வல்லமை அதன் பிறகு)... எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும் (அது இன்னும் நிறைவேற வில்லை) எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள். (நீங்கள் பன்னிரண்டு பேர் எனக்கு எருசேலமிலே சாட்சிகளாயிருங்கள்). இவைகளை அவர் சொன்ன பின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக் கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. இப்பொழுது, பக்கத்தை திருப்புங்கள், இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறுவதைக் காணுங்கள்: பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது. அவர்கள் எல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். ('அப்பொழுது சடுதியாய் போதகர் வந்து... நான் அங்கு தவறாகப் படித்து விட்டேன். இல்லையா? அப்பொழுது சடுதியாய் போதகர் பிரசங்க பீடத்துக்கு வந்தார்''. இல்லை). அப்பொழுது சடுதியாய் .... ஒரு முழக்கமுண்டாகி (ஏதோ கற்பனையல்ல, உண்மை யாகவே முழக்கம் உண்டானது) .... ஒரு முழக்க முண்டாகி... (போதகர் ஒருவர் கதவண்டை வந்தார்! குருவானவர் பரிசுத்த இடத்திலிருந்து இராப்போஜனத்தை கொண்டு வந்தார். இல்லை அப்படியொன்றுமில்லை)... வானத்திலிருந்து ..சடுதியாய் ஒரு முழக்கமுண்டாகி... (காலடி ஓசையல்ல)... பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடுதியாய் ஒருமுழக்கமுண்டாகி ... (ஓ, என்ன வ்யூ) அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அப். 2:1-2. 55.பரிசுத்த ஆவி என்பது என்ன? இங்கு தான் அவர்கள் வல்லமையைப் பெற்றுக்கொள்கின்றனர், இங்கு தான் அவர்கள் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. அவர்கள் காத்திருந்தபோது, இதுதான் நடந்தது. ஆதியாகமம் முதல் உள்ள எல்லோருமே, ஆபிரகாம் துவங்கி எல்லோருமே, அது வருமென்றும், அது எப்படி வருமென்றும், அதனால் ஏற்படும் பலன்கள் (Results) என்னவென்றும் தீர்க்கதரிசனம் உரைத்திருந்தனர். அது என்ன? சபைக்கு -விசுவாசிகளுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஒன்று.... அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழு வதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினி மயமான நாவுகள் போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின் வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள் (அதைக் குறித்து நாம் வெள்ளி இரவன்று பார்க்கப்போகிறோம். இப்பொழுது அதைவிட்டு விடுவோம் பாருங்கள்?). (அப். 2:2-4) அது எவ்வாறு உள்ளது? அது சபைக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஒன்று, முற்றிலுமான ஒரு வாக்குத்தத்தம். சரி. 56.அவர்கள் நிறைக்கப்பட்ட பின்பு, எவ்வளவு காலமாக அவர்கள் முத்திரை போடப்பட்டிருந்தனர் என்று இப்பொழுது நாம் காணப்போகிறோம். உங்களில் எத்தனை பேர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறீர்கள், கையுயர்த்துங்கள் பார்க்கலாம்? பரிசுத்த ஆவி பெறாதவரைக் காட்டிலும் பரிசுத்த ஆவி பெற்றுள்ளவர் அதிகம் பேர் இங்குள்ளனர். பரிசுத்த ஆவியைப் பெறாத சகோதரனே, சகோதரியே, நீங்கள் எங்களில் ஒருவராக இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். அது என்னவென்று நீங்கள் புரிந்து கொண்டால் - அது தேவனுடைய கிரியைகளைச் செய்வதற்கு உங்களிடம் வாசம் செய்யும் தேவனுடைய ஆவியாம். தேவன் தம்முடைய ஆவியை தம்முடைய ஊழியக்காரர்களுக்குகுள்ளும், தீர்க்கதரிசிகளுக்குள்ளும், போதகர்களுக்குள்ளும், நம் அப்போஸ்தலர்களுக்குள்ளும் அனுப்பின போதெல்லாம், அவர்கள் உலகத்தால் புறக்கணிக்கப் பட்டனர். அவர்கள் வாழ்ந்த காலம் ஒவ்வொன்றிலும், அவர்கள் பைத்தியக்காரராக கருதப்பட்டனர். பவுல் அகிரிப்பா முன்னால் நின்றபோதும் கூட, அவன், ''இவர்கள் மதபேதம் (heresy) என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே...'' என்றான் (அப். 24:14). மதபேதம் என்றால் என்ன? “பைத்தியக்காரத்தின்படியே - பைத்தியக்காரன் என்று அழைக்கிறப்படியே - எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு நான் ஆராதனை செய்கிறேன். அவர்களில் நானும் ஒருவன் என்று என்னால் கூற முடிவதற்காக நான் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். ஆம் ஐயா! அது உண்மை . அவர்களில் நானும் ஒருவன் என்று என்னால் கூற முடிவதற்காக நான் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். 57.பரிசுத்த ஆவி அவர்கள் மேல் விழுந்த பிறகு, அது அவர்களை மிகவும் இனிய இதயம் படைத்தவர்களாக ஆக்கினபடியால், அவர்கள் எல்லாவற்றையும் பொதுவாக வைத்து அனுபவித்தனர். அது சரியா? என்னே, என்னே, என்னே ஒரு ஐக்கியம்! சில சமயங்களில் நாம்,''ஓ, என்ன ஐக்கியம், ஓ, என்ன தெய்வீக மகிழ்ச்சி...'' என்னும் பாடலைப் பாடுவதுண்டு. அது தான். சூரியன் பிரகாசித்தாலும் பிரகாசிக்கமால் போனாலும் அவர்கள் கவலைகொள்ள வில்லை. அவர்கள் சுலபமான பூப் படுக்கையை கேட்கவில்லை. சிலர், “சகோ.பிரான்ஹாமே, நான் கோடிசுவரன் ஆவேன் என்று நீர் வாக்குறுதி அளித்தால், நான் எண்ணெய் கிணறுகளை கண்டுபிடிப்பேன், தங்க சுரங்கங்களைக் கண்டு பிடிப்பேன் என்று நீர் வாக்குறுதி அளித்தால், நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறேன்'' என்கின் றனர். பாருங்கள்? ஜனங்கள் அப்படிப்பட்ட பொய்யான காரியங்களைப் போதிக்கின்றனர். தேவன் இவைகளை வாக்களிக்கவில்லை. 58.பரிசுத்த ஆவியைப் பெற்ற ஒரு மனிதன், தன் ஆகாரத்துக்காக பிச்சை எடுக்கிறவனோ இல்லையோவென்று கவலை கொள்வதில்லை. அது அவனுக்கு எவ்வித வித்தியாசத்தையும் உண்டுபண்ணுவ தில்லை. அவன் பரலோகத்தை நோக்கி செல்லும் சிருஷ்டியாயிருக்கிறான். அவனுக்கு இவ்வுலகில் எந்தவிதமான இணைப்பும் கிடையாது. அது உண்மை . என்ன வந்தாலும், என்னபோனாலும் அவன் கவலை கொள்வதில்லை. அவர்கள் குற்றப்படுத்தட்டும், கேலி செய்யட்டும்,உங்கள் கொளரவம் போகட்டும், அதனால் உங்களுக்கு என்ன கவலை? நீங்கள் மகிமைக்கு செல்லும் பாதையில் போய்கொண்டிருக்கிறீர்கள் அல்லேலுயா? உங்கள் கண்கள் கிறிஸ்துவின் மேல் பதிந்துள்ளன. நீங்கள் பாதையில் போய்க் கொண்டிருக்கிறீர்கள். உலகம் என்ன கூறினாலும் நீங்கள் கவலை கொள்வதில்லை. அப்படித்தான் பரிசுத்த ஆவி உள்ளது. அது வல்லமை; அது முத்திரை ; அது தேற்றரவாளன்; அது பரிந்து பேசுகிறவர்; அது அடையாளம். ஓ, என்னே! தேவன் உங்களை ஏற்றுக்கொண்டார் என்பதற்கு அது உறுதி. நான் எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டேன்? எனக்கு இன்னும் எட்டு நிமிடங்கள் மாத்திரமேயுள்ளன. சரி... நான் அநேக வேதவாக்கியங்களை இங்கு குறித்து வைத்துள்ளேன். அவை எல்லா வற்றையும் குறிப்பிட முடியாது. நம்மாலானதை நாம் முயல்வோம். ஒரு மனிதன் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்ட பின்பு, துன்புறுத்தல்களும் மற்ற வையும் அவனைத் திரும்பி வரச் செய்யும் என்பது சாத்தியமா .... அவன் இழக்கப்படுவதில்லை; அவன் அப்பொழுது தேவனுடைய புத்திரனா யிருக்கிறான். அவன் எப்பொழுதுமே அவ்வாறிருப்பான். ஏனெனில் நீங்கள் முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள். எவ்வளவு காலம்வரைக்கும்? (சபையோர், “மீட்கப்படும் நாள் வரைக்கும்'' என்று விடையளிக்கின்றனர் - ஆசி). அது உண்மை! அப்படித்தான் வேதம் உரைக்கிறது. 59.சீஷர்கள் அடிக்கப்பட்ட பின்பு, அவர்கள் பரியாசம் பண்ணப்பட்டு, மற்றெல்லாம் செய்யப்பட்டனர். அவர்கள் சிறிது காலம் திரும்பி வந்து ஒன்று சேருவதற்கு நேரம் வந்துவிட்டதென்று எண்ணினர். நாம் அப்போஸ்தலர் 4 - ம் அதிகாரத்துக்கு திருப்பி என்ன நடந்ததென்று பார்ப்போம். இது பரிசுத்த ஆவியை ஏற்கனவே பெற்றுள்ள ஜனங்களாகிய உங்களுக்கு அப்போஸ்தலர் 4-ம் அதிகாரம். தேவாலய வாசலண்டையில் பேதுருவும் யோவானும் சுகமளிக்கும் ஆராதனை ஒன்று நடத்தினதற்காக அடிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். எத்தனை பேருக்கு அது தெரியும்? அங்கு சப்பாணியான ஒரு மனிதன் படுத்துக்கொண்டிருந்தான். அவனால் நடக்க முடியவில்லை. அவன் அந்நிலையில் நாற்பது ஆண்டுகளாக இருந்தான். பேதுரு அந்த வழியாக சென்றபோது, அவன் தன் ஆகாரத்துக்காக ஏதாவது கிடைக்குமென்று நினைத்து தன் கோப்பையை அவன் முன்னால் நீட்டினான் (பேதுருவினிடம் பணம் ஒன்றும் இல்லை; அவன் பரிசுத்த ஆவி நிறைந்த பிரசங்கி என்று அதன் மூலம் காண்பித்தான்) அவன், ''வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை'' என்றான். பாருங்கள்? அவன் அதைக் குறித்து கவலை கொள்ளவேயில்லை. ஏனெனில் அவன் பரலோகம் சென்றுகொண்டிருக்கிற சிருஷ்டி ஓ, அதை சிறிது நேரம் விவரிக்க நமக்கு நேரமிருந்தால் நலமாயிருக்கும்! பாருங்கள்? அவன் பரலோகம் நோக்கிச் செல்பவன்; அவன் தேற்றப்பட்டான்; அவன் ஆவியைப் பெற்றிருந்தான்; அவனிடம் வல்லமை இருந்தது. அவன் அங்கு நடந்துச்சென்று, ''வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்தி லுள்ளதை உனக்குத் தருகிறேன்“ என்றான் (அப். 2:6). 60.அந்த மனிதன், “ஐயா, உம்மிடத்தில் என்ன உள்ளது?' என்று கேட்டிருப்பான் என்பதில் ஐயமில்லை. ''என்னிடத்தில் விசுவாசம் உள்ளது. பத்து நாட்களுக்கு முன்பு துவங்கின ஒன்று என் இருதயத்தில் உள்ளது. நான் அப்பொழுது மேலறையில் இருந்தேன். சடுதியாக தேவன் அளித்த வாக்குத்தத்தங்கள் அனைத்தும்... நான் இயேசுவுடன் கூட மூன்றரை ஆண்டு காலம் நடந்திருக்கிறேன். நான் அவருடன் மீன் பிடித்திருக்கிறேன், மீன்களை இழுத்திருக்கிறேன். இப்படிப்பட்ட காரியங்களை நான் செய்திருக்கிறேன். அவர் பிணியாளிகளை சொஸ்தப் படுத்துவதை நான் கண்டிருக்கிறேன். அவர் பிதா எனக்குள் வாசமாயிருக்கிறார். நான் போய்விட்ட பின்பு, அவர் உனக்குள் வருவார்' என்று என்னிடம் சொல்லிக் கொண்டேயிருந்தார். அப்பொழுது எனக்கு அது புரியவில்லை. அவர், 'நீங்கள் புரிந்துகொள்ள மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும், நீங்கள் புரிந்து கொள்ளவிட்டாலும், நான் சொல்வதைக் கேளுங்கள் என்றார்'' என்றார். எனக்கு இன்னும் அது புரிய வில்லை. உங்களுக்கு புரிந்துவிட்டது என்று என்னிடம் கூறாதீர்கள், ஏனெனில் நீங்களும் புரிந்து கொள்ளவில்லை. பாருங்கள்? என்னால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை; என்னால் அதற்கு விளக்கம் தர முடியவில்லை. ஆனால் ஒன்று மாத்திரம் எனக்குத் தெரியும், அதை நான் பெற்றிருக் கிறேன். 61.நீங்கள், 'அப்படியானால் அது விஞ்ஞானப் பூர்வமான ஒன்றல்ல“ என்று கூறலாம். ஓ, நிச்சயமாக அது விஞ்ஞானப் பூர்வமானதே. இந்த விளக்குளைப் பாருங்கள். பென்ஜமின் ஃபிராங்க்லின் அதை கண்டுபிடித்தபோது, அவர், ''எனக்கு கிடைத்து விட்டது'' என்றார். அவருக்கு என்ன கிடைத்தது என்று அவருக்குத் தெரியாது. ஆனால் அவரிடம் அது இருந்த மின்சாரம் என்னவென்று யாராகிலும் இன்றிரவு என்னிடம் கூறும்படி கேட்டுக் கொள்கிறேன். அது என்னவென்று அவர்களுக்கு இன்னும் தெரியாது, ஆனால் அதை நாம் பெற்றுள்ளோம். ஆமென்! அது உண்மை. அது உண்மை. மின்சாரம் என்னவென்று எந்த மனிதனுக்கும் தெரியாது. அவர்கள் அதை கட்டுக்குள் கொண்டு வந்து (harness) விளக்குகளை எரிக்க முடியும், அது செயல் புரியும்படி செய்ய முடியும். அது ஜெனரேடர்களின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. (இரண்டு துண்டுகள் ஒன்றாக இப்படி ஓடுவதனால், மின்சாரம் உற்பத்தியாகின்றது. அவ்வளவுதான் அவர்களுக்குத் தெரியும். அது வெளிச்சம் தரும், அதில் சக்தி அடங்கியுள்ளது. அது தேவனுடைய ஆவியைப் போன்றது. அதை நீங்கள் பெறும்போது... ஒரு துண்டு நீங்கள், மற்ற துண்டு தேவன். இவைகளை ஒன்றாக சுற்றும்படி செய்தால், அது உங்களுக்கு ஏதோ ஒன்றைச் செய்யும். அது உண்மை ! அது வெளிச்சத்தைத் தரும்; அது வல்லமையைத் தரும். அது என்னவென்று உங்களுக்குத் தெரியாது, அது என்னவென்று நீங்கள் ஒருபோதும் அறிந்துகொள்ளமாட்டீர்கள். ஆனால் அதை நீங்கள் பெறும்போது, அதைப் பெற்றுக்கொண்ட தாக அறிந்துகொள்வீர்கள். அது உங்களுடையது. அது ஒரு உறுதி. அது உண்மை . அந்த விளக்கு நமக்கு எதை காட்டுகிறது? அது வெளிச்சம் என்னும் உறுதியை அளிக்கிறது. 62.இதை கவனியுங்கள். அது என்னவென்று உங்களுக்குத் தெரியாது. ஆனால் இந்த ஆசாமிகள் தங்களுக்கு ஒன்று மாத்திரம் தெரியும் என்று கூறினார்கள். அவர்கள், இவர்கள் பேதமையுள்ளவர்கள் என்று எங்களுக்குத் தெரியும்' என்றனர் அந்த ஜெர்மன் தேசத்தான் தன்னைக் கூறிக்கொண்டது போல், இவர்கள் இன்னும் சில நட்டுகள் (பாருங்கள்?) அவர்கள், ''இவர்கள் படிப்பறியாதவர்களும், பேதமையு முள்ளவர்களுமே, ஆனால் இவர்கள் இயேசு என்றழைக்கப்பட்ட அந்த மீன் பிடிப்பவன்; அந்த தச்சனுடன் கூட இருந்தவர்கள். ஏனெனில் அவன் புரிந்த அதே செயல்களையே இவர்களும் புரிகின்றனர்'' என்றனர். அதுதான் பரிசுத்த ஆவி. அது பேதையான ஒரு செம்படவன், அல்லது தச்சன் அல்லது போதகர் யாராயிருந்தாலும் சரி அவர்களுக்குள் வாழ்கின்றது. இவ்வுலகின் காரியங்களுக்குப் பேதையாயிருக்க விரும்பி, இயேசுவை தனக்குள் வர அனுமதிக்கும் எந்த மனிதனுக்குள்ளும் தேவனுடைய ஆவி முத்திரையாய், தேற்றரவாளனாய் விளங்குகிறார். அவன் கெளரவத்தைக் குறித்து கவலைகொள்வதில்லை; அவனுக்குத் தேவையான ஒன்றே ஒன்று தேவனே! 63.தேவன் ஒழுங்கைக் கொண்டு வந்தபோது, அவர் 'லேவியர்களே, உங்கள் எல்லோரையும் நான் வெளியே அழைத்து, உங்களை ஆசாரியர்களாக் கினேன். மற்ற பன்னிரண்டு - இல்லை, பதினொன்று கோத்திரங்களிலுள்ள உங்கள் சகோதரர் அனைவருமே உங்களுக்கு தசமபாகம் செலுத்துவார்கள்.'' ''உங்களுக்கு பத்து மரக்கால் ஆப்பிள் பழங்கள் கிடைத்தால், ஒரு மரக்கால் பழத்தை லேவியருக்கு கொட்டிவிடுங்கள். உங்கள் ஆடுகளை இந்த அறையில் கடக்கப்பண்ணும்போது, பத்தாம் ஆட்டை தெரிந்து கொள்ளுங்கள். அது சிறிதானாலும், பெரிதானாலும், கொழுத்திருந்தாலும், மெலிந்திருந்தாலும் எனக்கு கவலையில்லை. அது லேவியருக்கு சொந்தமானது.“ “லேவியர்களே, இவையனைத்தும் நீங்கள் பெறும்போது, நீங்கள் கர்த்தருக்கு அதிலிருந்து தசமபாகம் செலுத்தவேண்டும். நீங்கள் அசைவாட்டும் காணிக்கை, ஏறெடுத்துப்படைக்கும் காணிக்கை போன்ற வெவ்வேறு காணிக்கைகளை செலுத்துங்கள். நீங்கள் கர்த்தருக்கு தசமபாகம் செலுத்துங்கள்.” “ஆனால் மோசே, உன்னைப் பொறுத்தவரையில், நான் உன்னுடையவர்'' என்றார். ஓ, என்னே! அவர், ''நானே உனக்கு திருப்தி அளிக்கும் பங்கு'' என்றார். இன்றைக்கு பரிசுத்த ஆவி அவ்வாறு தான் பைக்கு உள்ளது. வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை. ஆனால் என்னிடம் திருப்தியளிக்கும் பங்கு உண்டு. அல்லேலுயா! எனக்கு கல்வி கிடையாது, இந்த புத்தகத்தை என்னால் படிக்க முடியாது. ஆனால் என்னிடம் திருப்தியளிக்கும் பங்கு உண்டு. அது நல்லது. எனக்கு டாக்டர் பட்டங்கள் எதுவும் கிடையாது. ஆனால் என்னிடம் ஒன்றுண்டு: திருப்தியளிக்கும் பங்கு. அந்த பங்குதான் எனக்கு வேண்டும். அந்த பங்கைதான் நீங்கள் பெற வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். இந்த மற்ற பழைய காரியங்களையெல்லாம் தூர எறிந்துவிடுங்கள் - கொளரவம் போன்றவைகளை. தேவனுடைய திருப்தி பளிக்கும் பங்கை பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் இவ்வுலகில் நீங்கள் பெற்றுள்ளவைகளை இவ்விடம் விட்டுச் செல்லும்போது, இங்கேயே விட்டு விட நேரிடும். ஆனால் உங்களுக்கு திருப்தியளிக்கும் பங்கு இருக்குமானால், அது நிச்சயமாக உங்களை மேலே கொண்டு செல்லும்.' 64.நாம் மரித்தால் நம்மை அடக்கம் செய்வதற்கு சவப் பெட்டிக்காரனுக்கு (Undertaker) பணம் செலுத்த இன்று காப்பீட்டில் (Insurance) சேருகிறோம். நாம் தேவனுடைய திருப்தியளிக்கும் பங்கை பெற்றுக் கொண்டு சவப்பெட்டிக்காரனுக்கு (Undertaker) பதிலாக மேலே கொண்டு செல்பவரைச் (Uptaker) சேருவோம். (உங்களுக்குத் தெரியும், இருவரும் பணிபுரிகின்றனர் என்று) இப்பொழுது, நாம் பார்ப்போம். அவர்கள் விடுதலையாக்கப்பட்ட பின்பு, தங்களை சேர்ந்தவர்கள்ளிடத்தில் வந்து... (ஆசாரியர்களிடத்தில் அல்ல. பாருங்கள்? அவர் அதைப் பெற்றிருந்தனர் என்பதை அது காண்பிக்கிறது. அவர்கள் அந்த பழைய, குளிர்ந்த, சம்பிரதாய மார்க்கத்துக்கு மறுபடியும் செல்லவில்லை. இல்லை! அவர்கள் அங்கு சென்று, அவர்கள் எங்களுக்கு என்ன செய்தார்களென்று பாருங்கள்'' என்று கூறவில்லை. இல்லை, இல்லை! அவர்களுக்கு தங்களைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். அவர்கள் ஒரு டஜன் பேர் மாத்திரமே இருந்தனர். இருந்தாலும் அந்த சொற்ப பேர் அவர்கள்ளுக்கு போதுமானவர்களாயிருந்தனர். - ... விடுதலையாக்கப்பட்ட பின்பு... அவர்களை அடித்து, “நீங்கள் மறுபடியும் இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தால்...'' என்று இவர்களை பயமுறுத்தின பின்பு. ஓ, ஓ, நான் உண்மையாகக் கூறுகிறேன்.” அது உண்மை பாருங்கள்? ''நீங்கள் மறுபடியும் இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தால், அல்லது வேறெதாகிலும் செய்தால், உங்களை சிறைப்படுத்துவோம்.'' அவர்கள், ''வ்யூ! அது பயங்கரமான ஒரு பயமுறுத்துதல், நமது சகோதரர்களிடத்தில் போவோம் வாருங்கள் என்று கூறிச் சென்றனர். ஓ, அப்படித்தான் செய்யவேண்டும். ஒற்றுமையில் தான் வல்லமை; ஒற்றுமையில் தான் வல்லமை ''நமது சகோதரரி டத்தில் சென்று, நாம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்'' என்றனர். 65.அவர்கள் எல்லோரும் ஒன்று கூடி, வெவ்வேறு அனுபவங்களைக் கூறினர். . அவர்கள் விடுதலையாக்கப் பட்ட பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள். அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு.... (அவர்கள் என்ன சொன்னார்களென்று கவனியுங்கள். அவர்களைக் கவனியுங்கள். அவர்கள் திரும்பிச் சென்று ஓ' என்றோ , “ஓ, கர்த்தாவே, நான் வருத்தப்படுகிறேன்...' என்றோ கூறவில்லை. இல்லை. அவர்கள் ஏற்கனவே இரட்சிக்கப்பட்டிருந்தனர்; அவர்கள் ஆவியால் நிறைக்கப்பட்டிருந்தனர்; அவர்கள் ஆவியால் நிறைக்கப்பட்டிருந்தனர்; அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருந்தனர்)... ... ஒருமனப்பட்டுத் தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே... நீர் தேவனாயிருக்கிறீர்... (ஆமென்! எனக்கு அது பிரியம். சகோ. பாமர், எனக்கு அது பிரியம்...) நீர் தேவனாயிருக்கிறீர்... (அது நமக்குத் தெரியும். நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கி தேவனாயிருக்கிறீர். தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால்... 66.இப்பொழுது கவனியுங்கள், அவர்கள் திரும்பி வந்து, “நாங்கள் இனிமேல்...'' என்று கூறவில்லை. அவர்கள் அங்கு சென்று, கர்த்தாவே, ஒருநிமிடம் பொறும். அவர்கள் என்னை அதிகமாக கேலி செய்கிறார்கள்'' என்று கூறவில்லை! அவர்கள் அப்படி செய்வார்கள் என்று அவர் கூறவில்லையா! 'கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்கமானதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்'' (2 தீமோ. 3:12). ''உனக்குத் தெரியுமா, என் முதலாளி என்னிடம் கூறினார், அவர் என்னை அங்கு கண்டுபிடித்தால் ...அவர்கள் அப்படி கூறுவார்கள், என்று அவர் கூறவில்லையா?. “உனக்குத் தெரியுமா, அவர்கள் என்னை நீதிமன்றத்துக்கு இழுத்து சென்றனர்...''அவருடைய நாமத்தினிமித்தம் நீங்கள் ராஜாக்களுக்கும், அதிபதிகளுக்கும் முன்பாக கொண்டு போகப்படுவீர்கள் என்று அவர் கூறவில்லையா? என்னத்தைப் பேசுவோம் என்று கவலைப்படாதிருங்கள். பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, அது நேற்று நிகழ்வதைக் கண்டேன்). உங்களில் வாசமாயிருக்கிற பரிசுத்த ஆவியானவரே பேசுகிறவர்'' (மத்.10:18-20) பாருங்கள் ? ஆமென்! அது உண்மை . என்னத்தைப் பேசுவோம் என்று கவலைப்படாதிருங்கள்.” 67.புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன்? என்றும், கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, ஏரோதும் பொந்தியு பிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங் கூட, நீர் அபிஷேகம் பண்ணின. உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங் கூடினார்கள். அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே. அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன் குறித்தவைகள் யாவும் செய்யும்படி (ஓ, என்னே! அது எனக்குப் பிரியம். “கர்த்தாவே, அவர்கள் செய்வார்களென்றும் நீர் கூறின அதே காரியங்களையே செய்கின்றனர்'' வேதம், கடைசி நாட்களில் பரியாசக்காரர் தோன்றுவார்கள். அவர்கள் துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப் புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்கள்ளாயும், இச்சையடக்கமில்லாதவர் களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை (வல்லமையை) மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்” என்றுரைக்கிறது. அவர்கள் சென்று வல்லமையை பெற்றுக்கொள்ளவில்லை.' பரிசுத்த ஆவி உங்களி டத்தில் வரும்போது... தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை (Power) மறுதலிக்கிவர்களாயும் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு“ அதுதான் பரிசுத்த ஆவி. பாருங்கள்? முன் குறித்தவைகளைச் செய்தல்). 68.இப்பொழுதும், கர்த்தாவே அவர்கள் பயமுறுத்தல்களைத் தேவரீர் கவனித்து, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ் செய்தருளும் என்றனர். (ஓ, அது எனக்கு பிரியம். கோழி எலும்பை (wishbone) தூர எறிந்துவிட்டு, உண்மையான முதுகெலும்பை (backbone) பெற்றுக்கொள்ளுதல்). பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி... (ஓ, சகோதரனே! பிசாசுகள் மரிப்பதில்லை, பரிசுத்த ஆவியும் மரிப்பதில்லை) உம்முடைய கரத்தை நீட்டி... உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய, இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, (அவர்கள் எதைக் குறித்து சந்தடி செய்கிறார்கள் என்று பார்த்தீர்களா? இன்றைக்கும் அவர்கள் அதையே செய்கின்றனர். அதனால் ஒரு உபயோகமுமில்லை) அவர்கள் ஜெபம்பண்ணின்போது அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது, அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவ வசனத்தைத் தைரியமாய் சொன்னார்கள். என்னே! அவர்கள் மேலறையில் சென்றபோது, ஒன்றைப் பெற்றுக்கொண்டனர். இல்லையா? வாக்குத்தத்தம் கூறினது... அதுதான் பரிசுத்த ஆவி செய்கிறது - உங்களுக்கு தைரியத்தை அளிக்க, உங்களைத் தேற்ற, உங்களை முத்தரிக்க, உங்களுக்கு ஒரு அடையாளத்தை கொடுக்க. ஓ என்னே! 69.கவனியுங்கள்! (ஓ, நமக்கு நேரமிருந்தால் நலமாயிருக்கும்) நாம் பிலிப்புவுடன் சமாரியர்களிடம் அப்.8:14க்கு சென்றிருக்கலாம். (வசனத்தைக் குறித்துக்கொள்ளும் உங்களுக்கு). அங்கு மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. அங்கு மகத்தான சுகமளித்தல் நிகழ்ந்தது. அங்கிருந்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றனர். அவர்கள் எருசலேமுக்கு ஆள் அனுப்பி பேதுருவை வர வழைத்தார்கள். அவன் வந்து அவர்கள் மேல்கைகளை வைத்தபோது, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள். (அப். 8:14) புறஜாதிகளிலே கொர்நேலியு என்னும் பெயர் கொண்ட ஒருவன் இருந்தான். அவன் அற்புதமானவன், தசமபாகம் செலுத்தி வந்தான், ஜனங்களுக்காக தேவாலயத்தைக் கட்டினான். தேவனை மதித்து, தேவனுக்கு பயந்திருந்தான். அவன் நல்லவன், நல்ல பிரஸ்பிடேரியன், மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, அல்லது ஏதோ அப்படிப்பட்ட ஒன்றை சேர்ந்தவன் (பாருங்கள்?), மிகவும் நல்லவன். ஒரு நாள் தேவன், ''அவன் நல்லவன். அவனை ஒரு கூட்டத்துக்கு அனுப்பப் போகிறேன். என் போதகரை அங்கு அனுப்பி, அதைக் குறித்து அவனிடம் கூறப்போகிறேன்'' என்றார். சரி. கொர்நேலியு ஒரு தரிசனம் கண்டான். அதில் 'நீ யோப்பா பட்டணத்துக்கு மனிதரை அனுப்பு, அங்கு சீமோன் என்னும் பெயர் கொண்ட தோல் பதனிடுகிறவன் இருக்கிறான். அவனிடத்தில் சீமோன் பேதுரு என்னும் ஒருவன் தங்கியிருக்கிறான். அவன் இங்கு வரட்டும். அவன் உனக்கு வழியை அறிவிப்பான், ஏனெனில் அவன் ஒன்றைப் பெற்றிருக்கிறான்'' என்றார். 70.பேதுரு அங்கு வந்து நின்றபோது ... கொர்நேலியு அந்த போதகரை பணிந்துகொள்ளப் போனான். பேதுரு, ''எழுந்திரும், நானும் ஒரு மனிதன் தான்'' என்றான். இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக் கையில் (அவர்கள் எப்படி அங்கு சென்று பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டனர் என்று ... நாம் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கும் அதே விஷயம்; எப்படி தேவன் பரிசுத்த ஆவியை ஊற்றுவதாக வாக்களித்துள்ளார் என்று): இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக் கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவி அவர்கள் மேல் இறங்கினார் வ்யூ ஆம், அவர்களுக்குத் தான் பரிசுத்த ஆவி நிச்சயமாக அவர்கள் யாவரும் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டனர். இப்பொழுது கவனியுங்கள். எபேசுவிலே ஒரு பாப்டிஸ்டு சகோதரன் இருந்தான். அவன் முதலில் ஒரு வழக்கறிஞராக இருந்தான், சமார்த்தியமுள்ளவன் புத்திசாலி, சட்டங்களை நன்கு கற்றறிந்தவன், பெரியவன், கல்வியறிவு கொண்ட மேதை, ஒரு நாள் அவன் வேதாகமத்தை படிக்க ஆரம்பித்தான். மேசியா என்னப்படுபவர் ஒருவர் வருவாரென்று அவன் அதிலிருந்து அறிந்துகொண்டான். அவன் அப்படி அறிந்துகொண்டபோது, இந்த இயேசுவவைக் குறித்து கேள்விப்படத் தொடங்கினான். அவன், ''எனக்கு உறுதியாகிவிட்டது. இயேசுவே தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்னும் என் விசுவாசத்தை நான் பகிரங்கமாக அறிக்கையிடுவேன்'' என்றான். அவன் உண்மையான பாப்டிஸ்டு. அவன் அங்கு வந்து, ''இயேசுவே கிறிஸ்து என்று நான் பகிரங்கமாக அறிக்கையிடுகிறேன்'' என்றான். அவன் அதிகமாக இவ்வாறு அறிக்கையிட்டு வந்த காரணத்தால், தேவன் அவனை ஊழியத்துக்கு அழைத்துக் கொண்டார். தேவன் எப்பொழுதுமே உண்மையான இருதயத்துடன் பேசுவார். 71.அங்கு ஆக்கில்லா, பிரிஸ்கில்லா என்னும் பெயர் கொண்ட கணவன் மனைவி இருந்தனர். அவர்கள் கூடாரம் செய்பவர்கள். அப்போஸ்தலர் 18-ம் அதிகாரம் அவர்களைக் குறித்து உங்களுக்கு உரைக்கிறது. அவர்கள் பவுலின் நண்பர்கள். அவர்கள் பவுலின் கரங்களினாலும் அவனுடைய போதங்களினாலும் பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள். அவர்கள் எழுப்புதல் கூட்டம் அங்கு நடக்கிறதென்று கேள்விப்பட்டு அங்கு சென்றனர். அந்த கூட்டத்துக்கு பத்து, பன்னிரண்டு பேர் மாத்திரமே வந்திருந்தனர். அது என்னவென்று காண ஆக்கில்லா அங்கு சென்றிருந்தபோது, இந்த போதகர் தன் இருதய உத்தமத்துடன் அங்கு பிரசங்கம் செய்து கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். அவன், ''உனக்குத் தெரியுமா, அவன் சத்தியத்துக்கு செவி கொடுப்பான் என்று நம்புகிறேன்'' என்றான். கூட்டம் முடிந்த பிறகு, இந்த போதகர் ஆக்கில்லாவை கூடாரத்துக்குப் பின்னால் அழைத்து வந்து, ''எங்களிடம் இவ்வளவு உயரமுள்ள ஒரு சகோதரன் இருக்கிறான். அவன் கொக்கி போன்ற வளைந்த மூக்கு கொண்ட யூதன். அவன் வரும் போது, தேவனுடைய வார்த்தையை வெளிப்படையாக உங்களுக்கு போதிப்பான்'' என்றான். 72.சிறிது நேரம் கழித்து... இந்த சமயத்தில் பவுல் சிறையில் இருந்தான் (நவீன பிரசங்கிக்கு அது பயங்கரமான ஒரு இடம். இல்லையா?). அவன் சிறையிலிருந்தான். கர்த்தர் அவனை அங்கு வைத்திருந்தார். அங்கு பூமியதிர்ச்சி ஏற்பட்டு, சிறையை அசைத்த பின்பு, அவன் சிறைச்சாலைக்காரனையும் அவனுடைய வீட்டாரையும் கொண்டு சென்று அவர்கள் அனைவருக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு இங்கு அடைந்தான். குறி சொல்லுகிற பெண்ணுக்குள் இருந்த அசுத்த ஆவியை அவன் துரத்தினான். அவள் மூலம் அவர்கள் மிகுந்த பணம் சம்பாதித்து வந்தனர். அவன் இந்த சூழ்ச்சியை அம்பலமாக்கினான். அதனால் அவர்கள் அவனை சிறையிலடைத்தனர். கர்த்தரோ சிறையை அசைத்தார். ஏனெனில் சத்தியத்தைக் கேட்பதற்காக அவர் ஒரு கூட்டம் ஜனத்தை அங்கு ஆயத்தம் செய்து வைத்திருந்தார். நீங்கள் என்ன செய்தபோதிலும் தேவனுடைய வார்த்தையை கட்டிப்போட முடியாது அப்படி செய்யவே முடியாது. 73.எனவே அவன் ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் இருந்த இடத்துக்கு வந்தான். அவர்கள் ஒருக்கால் சான்ட்விச்சு'களை தின்றிருக்கலாம். சான்ட்விச்சுகளை தின்றவுடனே அவர்கள் எழுப்புதல் கூட்டத்துக்கு புறப்பட்டு சென்றனர். பவுல் அங்கு உட்கார்ந்து கொண்டுதன் அங்கியை கையில் பிடித்துக்கொண்டு. இந்த பாப்டிஸ்டு போதகர் பிரசங்கிப்பதைக் கேட்டான். அவன், ''நீங்கள் பிரசங்கித்தது நன்றாயுள்ளது, ஆனால் அதைக் காட்டிலும் இன்னும் அதிகம் உள்ளது'' என்றான். அவன் தொடர்ந்து, “டாக்டர் அப்பொல்லோ, உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?' என்ற கேட்டான். அவன்,“ஓ, அப்படி ஒன்று இருப்பதாக நாங்கள் கேள்விப்படவே இல்லையே. பரிசுத்த ஆவி என்றால் என்ன? நாங்கள் பாப்டிஸ்டுகள்'' என்றான். பவுல், நீங்கள் பாப்டிஸ்டுகள் என்று எப்படி அறிவீர்கள்?'' என்று கேட்டான். பாருங்கள். - நல்லது, நாங்கள் ஞானஸ்நானம் பெற்றோம். எங்களுக்கு யோவான் கொடுத்த ஞானஸ்நானம் மாத்திரமே தெரியும்“ அவன், யோவான் உங்களுக்கு மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தை மாத்திரமே கொடுத்து, தனக்குப்பின் வருகிறவராகிய இயேசுகிறிஸ்துவில் விசுவாசிகளாயிருக்க வேண்டுமென்று கூறவில்லையா?'' என்றான். அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்தபோது பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசி தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். அவர் அதை விரும்பும் “எவனுக்கும்'' தருவதாக வாக்களித்துள்ளார். 74.இப்பொழுது, இப்பொழுது, நாம் எப்படி அதை செய்யப் போகின்றோம்? உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நான் முடிக்கப்போகிறேன், ஏனெனில் உங்களை நேரத்தோடு விட்டுவிடுதாகக் கூறினேன். பரிசுத்த ஆவி என்னவென்று அறிந்து கொண்டீர்கள். இன்றிரவு கடைசி வேதவசனமாக (நான் அநேக வேத வசனங்களை இங்கு குறித்து வைத்துள்ளேன், ஆனாலும் அவைகளை நாம் விட்டு விடவேண்டும்) நாம் 1 கொரிந்தியர் 12-ம் அதிகாரத்துக்கு திருப்பு வோம். இதை படித்துவிட்டு முடித்துவிடுவோம். சரி . 1 கொரிந்தியர் 12- ம் அதிகாரம். எத்தனை பேர் பரி.பவுலின் போதகத்தை விசுவாசிக்கிறீர்கள்? நிச்சய மாக. அவன் கலா.1:8ல், “ஒரு தூதனும் கூட வித்தியாசமாகப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக் கடவன்” என்று கூறியுள்ளான் பாருங்கள்? அதனுடன் எவ்வித தொடர்பும் கொள்ளவேண்டாம். இப்பொழுது இதை கவனியுங்கள், 1 கொரிந்தியர் 12. 75.நாம் உயிர்த்தெழ வேண்டுமானால் கிறிஸ்துவுக்குள் இருக்க வேண்டுமென்று எத்தனை பேருக்குத் தெரியும்? ஏனெனில் அவருடைய சரீரத்தையே தேவன் எழுப்புவதாக வாக்களித்துள்ளார். வேறெந்த வழியும் கிடையாது. வேறொரு வழியும் கிடையாது. நீங்கள் கிறிஸ்துவுக்கு வெளியே இருந்தால்... நீங்கள் இங்கு நோக்கி அவரை விசுவாசித்து, நிச்சயமாக அவர் தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன்'' எனலாம். நல்லது, என் சகோதரனே. நீ, 'அவரை நான் விசுவாசிக்கிறேன். அவர் என் இரட்சகர் என்று அறிக்கை செய்கிறேன்'' என்று கூறும்போது நல்லது. ஆனால் நீங்கள் இன்னும் அவருக்குள் இல்லை. ''நான் போதகருடன் கைகுலுக்குவேன். என் பாவங்களை நான் அறிக்கை செய்வேன்“ இருப்பினும், அது அவருக்குள் இருப்பதாக ஆகிவிடாது. 76.இப்பொழுது கவனியுங்கள்! நீங்கள் எப்படி கிறிஸ்துவுக்குள் நுழைந்து கொள்வது என்பதைக் குறித்து பவுல் என்ன கூறுகிறான் என்று பாருங்கள். நீங்கள் விருத்தசேதனம் செய்து கொண்டு விட்டதாக எப்படி அறிந்து கொள்ளப்படுவீர்கள். ஆபிரகாமுக்கு அது அடையாளமாகக் கொடுக்கப்பட்டது. 1கொரிந்தியர் 12 - ம் அதிகாரம், 12-ம் வசனத்திலிருந்து துவங்குவோம் : எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஓரே சரீரத்தின் அவயங்க ளெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவே இருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார் (பிரிந்திருக்கவில்லை, ஒன்றாயிருக்கிறார். கவனியுங்கள்!). நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும்.. (ஒரே சபையினாலே - எத்தனை பேர் என்னோடு கூட இதை படிக்கிறீர்கள்? ஒரே கைகுலுக்கினாலே, ஒரே தண்ணீரினாலே... இல்லை! அப்படியானால் யாரோ தவறு செய்கின்றனர்). ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, எல்லோரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம். 77.கிறிஸ்துவின் சரீரம் ஒரே ஆவி. பெந்தெகொஸ்தே நாள் துவங்கி இந்நாள்வரைக்கு முள்ள அதிலுள்ள ஒவ்வொரு நபரும் அதே புதிய திராட்சரசத்தை பருகி, அதே பரிசுத்த ஆவியைப் பெற்று, அதே பலன்களைத் தருகின்றனர். நாம் எப்படி அதை செய்கிறோம்? ஒரே ஆவியினால். அது தேவனுடைய திறந்தவாசல் - பரிசுத்தஆவி. அது என்ன? அது தேவனுடைய திறந்த வாசல்; அது ஒரு அடையாளம்; அது ஒரு முத்திரை; அது ஒரு தேற்றரவாளன்; அது ஒரு பரிந்துபேசுகிறவர்; அது ஒரு உறுதி; அது இளைபாறுதல்; அது சமாதானம்; அது நன்மை ; அது சுகமளிக்கும் ஒன்று; அது ஜீவன்; அது எல்லாவற்றிருக்கும் தேவனுடைய திறந்த வாசல். அது கிறிஸ்துவிடம் செல்ல தேவனுடைய திறந்த வாசல்... அதன் மூலம் தேவன் இயேசுவை மரித்தோரி லிருந்து எழுப்பினாரென்று நிருபித்துவிட்டார். கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களையும் தேவன் உயிர்த்தெழுதலின் போது அவரோடே கூட கொண்டு வருவார். ''நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்''. எத்தனை பேர் அதை விசுவாசிக்கிறீர்கள்? 78.கிறிஸ்து யார்? பரிசுத்த ஆவி என்பது என்ன? அது ஜனங்கள் கேலி செய்யும் ஒன்றல்ல ஜனங்கள் அதை கேலி செய்கின்றனர். ஆனால் விசுவாசி அவ்விதம் செய்வதில்லை. அவிசுவாசிக்கோ அது .... எனக்கு இரண்டு மூன்று வாரங்கள் இருந்திருந்தால் நலமாயிருக்கும். அது அவிசுவாசிக்கு என்னவாயுள்ளது என்று நாளை இரவு உங்களிடம் கூற விரும்புகி றேன். இதை சிறிது நேரத்துக்குள் வேகமாக கூறட்டும். அது பரிகாசத்துக்கு இலக்காக (laughing stock) உள்ளது. அது ஒரு கண்ணி; அது இடறல்; அது மரணம்; அது தேவனிடமிருந்து நித்திய பிரிவினையை உண்டாக்கு கிறது. அது அவிசுவாசிக்கு என்னவெல்லாமாக உள்ளதென்று என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஞாபகம் கொள்ளுங்கள், எந்த மழையைப் பார்த்து அவிசுவாசி பரிகாசம் பண்ணினானோ, அதே மழை நோவாவையும் அவனுடைய குடும்பத்தையும் காப்பாற்றியது. பாருங்கள் ஜனங்கள் பரிகாசம் செய்து, அது பைத்தியக்காரத்தனம் என்று கூறும் அதே ஆவி (பரிசுத்த ஆவி) தான், சபையை இந்த கடைசி நாட்களில் எடுத்துக்கொள்ளப்படுதலில் மேலே கொண்டுசென்று அவிசுவாசியின்மேல் நியாயத் தீர்ப்பை கொண்டுவரும். அது உண்மை ! அதுதான் பரிசுத்த ஆவி. “இதை நான் உத்தமத்தோடு என் இருதயத்தின் ஆழத்திலிருந்து கூறுகிறேன். அதன் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் திருப்தியடைவார்கள். 79.அது வரும்போது என்ன செய்யும் என்பதைக் குறித்து நாளை இரவு நாம் பேசப்போகிறோம். இங்குள்ள எத்தனை பேர் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டுமென்றும், நீங்கள் வெளிச்சத்தைக் காண யாராகிலும் உங்களுக்கு ஜெபம் பண்ண வேண்டுமென்றும் விரும்புகிறீர்கள்? அது என்னவென்று உங்களுக்குத் தெரியும். நாளை இரவு, அது என்ன செய்கிறதென்றும், அதற்கு அடுத்த இரவு அதை எப்படி பெற்றுக்கொள்வது என்பதைக் குறித்தும் நாம் பேசப்போகிறோம். அதன் பின்பு நாம் ஜனங்களை அழைத்து கற்பித்து, அவர்களை அறைகளுக்கு அனுப்பி, பரிசுத்த ஆவி வரும் வரைக்கும் - அது கிறிஸ்துமஸ் வரை நீடித்தாலும் (அது உண்மை) - அவர்கள் அங்கு தங்குபடி செய்யப்போகிறோம். நம் அதை நியாயமான, வேதாகம ஆதாரத்தைக் கொண்டு அணுகப்போகிறோம். தேவன் அதை வாக்களித்த விதமாகவும், அது துவக்கத்தில் விழுந்த விதமாகவும், நாம் அதை அணுகி அதைப் பெற்றுக்கொள்ளப் போகிறோம். அந்த விதமாக செய்யவே நாம் இங்கிருக்கிறோம். நான்... மற்றது என்ன கூறினாலும் அது ஒரு வித்தியாசத்தையும் உண்டுபண்ணாது. நாம் தேவனுடைய வார்த்தையே என் இருதயத்தில் முதன்மை ஸ்தானம் வகிக்கிறது. அது உண்மை. தேவன் எனக்கு என்ன வைத்திருக்கிறாரோ, அது எனக்கு “வேண்டும். வேறெதாகிலும் அதிகம் இருக்குமானால், கர்த்தாவே, பரலோகத்தை திறந்தருளும். என் இருதயம் அதை ஏற்றுக்கொள்ள திறந்திருக்கிறது. அது உண்மை. 80.எத்தனை பேருக்கு அது வேண்டும், உங்கள் கைகளையுயர்த்துங்கள். எனக்காக ஜெபியுங்கள்'' என்று கூறுங்கள். உங்கள் கைகள் மேலே உயர்த்தியுள்ள நிலையில் ; பரலோகப் பிதாவே, நாங்கள் நீண்ட நேரம் கற்பித்தோம், உமது ஆவி இங்குள்ளது. மேலே உயர்த்தப்பட்ட கைகள் இப்பொழுது உள்ளன, அது என்னவென்று அவர்களுக்குத் தெரியும். பரிசுத்த ஆவி என்னவாயுள்ளது என்று அவர்களுக்குத் தெரியும். தேவனே, இந்த கூட்டம் முடிவதற்கு முன்பு, இங்குள்ள ஒவ்வொரு கரமும் அதைப் பெற்றுக்கொண்டதன் அறிகுறியாக உயர்த்தப்பட வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். தேவரீர் அதை அருளும். அவர்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்களை நீர் ஆசீர்வதித்து, அவர்களுடைய இருதயத்தின் வேண்டுதல்களை அருளிச்செய்ய வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறோம். கர்த்தாவே, அவர்களுடைய கரங்களைப் பாரும். அவர்கள் உம்மை நேசிக்கின்றனர்; அவர்களுக்கு: அது வேண்டும். அவர்கள் போக முடியாது என்பதை அறிந்துள்ளனர். நாளை இரவு, கர்த்தாவே, நீர் எனக்கு உதவி செய்வீரா னால், அது இல்லாமல் அவர்கள் எடுக்கப்படுதலில் செல்லமுடியாது என்பதை வேத வாக்கியங்களைக் கொண்டு எங்களால் நிரூபிக்க முடியும். எனவே பிதாவே, அவர்களுக்கு பசிதாகத்தைக் கொடுத்து அவர்கள் திருப்தியடைய அருள் புரியும். பிதாவே, இப்பொழுது அவர்களை உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். இந்த ஆசீர்வாதங்களை அருளுவீராக இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 81.நான் அவரை நேசிக்கிறேன். நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் நாம் மறுபடியும் பாடுவதற்கு முன்பு இதைக் கூற விரும்புகிறேன். வெள்ளி இரவு ஆராதனை துவங்குவதற்கு முன்பு நான் போதகர்களை அறையில் சந்திக்க விரும்புகிறேன். பாருங்கள்? வெள்ளி இரவு நான்... நான் என்ன செய்ய முயல்கிறேன் என்று நீங்கள் காண்கிறீர்களா?அது என்னவென்று காண்பிக்கவும், அதை எப்படி அணுகுவதென்றும், எதற்கு மரியாதை செலுத்துவதென்றும். நீங்கள் குருட்டுத்தன மாக வந்து, தப்பிப் பார்க்கப் போவதில்லை. அதனால் தான் இன்றிரவு வரும்படி உங்களை அழைக்கவில்லை. அது என்னவென்று நீங்கள் அறியவேண்டு மென்று விரும்புகிறேன். அது ஒரு வாக்குத்தத்தம். அது ஒரு முத்திரை; அது ஒரு தேற்றரவாளன்; இன்னும் மற்றவை நாளை இரவும், அதற்கு மறுநாள் இரவும். நாம் உடனடியாக துவங்கி, அது வரும் வரைக்கும் நிலைத்திருப்போம். அது எவ்வளவு நாட்கள் நீடித்தாலும் கவலையில்லை; அது வரைக்கும் நாம் காத்திருப்போம். உங்கள் இருதயத்தை சுத்திகரியுங்கள். அவர் அசுத்தமான இருதயத்தில் அதை ஒரு பேதும் ஊற்றமாட்டார். சரியாகுங்கள்! ஆயத்தமாகுங்கள்! அவர் அதை அருளுவார். நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் (இப்பொழுது நம்முடைய கரங்களையுயர்த்துவோம்) முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை, கல்வாரி மரத்தில் 82.நாளை இரவு 7.30 மணிக்கு பதிலாக 7.00 மணிக்கு நாம் துவங்கலாம் என்று போதகர் இப்பொழுது கூறினார். அதற்கு நாம் ஆமோதம் தெரிவிக்கிறோம். உங்களை 9.30 மணிக்கு பதிலாக 8.30 மணிக்கே விட்டுவிட அது ஏதுவாயிருக்கும். நாளை இரவு 7 மணிக்கு பாடல் ஆராதனை துவங்கும். நான் 7.30 மணிக்கு செய்தி கொடுப்பேன். நான் அவரை நேசிக்கிறேன் (நமது உறுமால்களை எடுத்துக்கொண்டு அவரிடம் ஆட்டுவோம்) நான் அவரை நேசிக்கிறேன் (சம்பிரதாய முறையை முறித்துப்போடுங்கள்). முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில், சரி, இப்பொழுது உங்கள் போதகர், சகோ நெவில்.